வாழையடி வாழையாக நம் குலம் தலைத்து வாழவேண்டும் என்றால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் தான் முடியும். அதற்கு, நம் முன்னோர் சாப்பிட்டு வந்த இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதை தவிர, சிறந்த வழி வேறு இல்லை. நம் உணவு பொருட்களில், வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல மருத்துவ குணம் கொண்டவை. வாழைப் பூ முதல் தண்டு வரை உணவுக்கு சிறந்ததாகும். அதில், பல நோய்களை போக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும், அப்பொழுது தான் சூட்டின் தாக்கம் குறையும். காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவி, வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால், புண் குணமாகும். சின்னம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
சோரியாசிஸ், தோல் அலர்ஜி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில், வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலைவாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது, சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும், இலையில் தான் நிச்சயம் சாப்பாடு இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழையின் மகத்துவம் புரியாமல் போய் விட்டது. நகர் புறங்களில், தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் சாப்பாடு சுற்றி தரப்படுகிறது. இது நோய் மாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது.
நவீனத்தால் ஏற்பட்ட மாற்றத்தால், நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத் தான் கொண்டிருக்கின்றனர். ஆனால், நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர்; அதை மாற்ற முயற்சிக்கலாம். இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது, நம் முன்னோர்கள் ஏன் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
வாழைப்பூ, வாழைத் தண்டு மருத்துவத்துக்கு பயன்படுகிறது என்பது, எல்லோரும் அறிந்ததே. வாழையின் வேர் கூட, சித்த மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள், அவர்கள் வகுத்துள்ள முறைப்படி, நாம் உணவு உண்டு வேலை செய்தாலே, நிச்சயம் நோயின்றி வாழலாம்; அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணம்.
திருமணத்தின் போது கூட, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்பதன் மகத்துவம், இது தான். இப்போது வாழை இலை போன்று பிளாஸ்டிக் இலை வந்து விட்டது. ஒரு பொருள் கொண்ட தோற்றத்தில் செயற்கை பொருள் இருந்து விட்டால், இயற்கையை ஒரு போதும் மிஞ்ச முடியாது என்பதற்கு சாட்சி, வாழை மரங்கள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்