• ஒக்ரோபர் 2016
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,765 hits
 • சகோதர இணையங்கள்

பக்கவாதம் ( Hemiplegia ) வராமல் தடுக்கும் பரிபூரணமான மருந்து.

பக்கவாதம்

உலக மக்களில் மனிதனுக்கு வேகமாக வரக்கூடிய இரண்டாவது பெரிய  நோய் என்ற இடத்தை பிடித்திருப்பது பக்கவாதம், வயது வித்தியாசம்  பார்க்காமல் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் பக்கவாதம் ( Hemiplegia ). மூளைக்கு செல்லும்  இரத்த ஓட்டம் தடைபடும் போது அல்லது குறைவாக செல்லும் போது  மூளை நிர்வகித்து வரும் குறிப்பிட்ட பகுதி தன் செயல்பாட்டை பாதியாகவோ அல்லது முழுமையாகவோ இழக்கிறது.

சித்தர் பெருமக்கள்  இந்த வியாதியை பக்கவாதம் என்ற பொதுப்பெயரிலும், உடலின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்படும் போது தனித்தனி பெயரிலும்  அழைக்கின்றனர் உதாரணமாக முகத்தில் வாதம் வரும் போது அது முகவாதம் என்றும். உடம்பு முழுவதும் செயல்படாமல் இருந்தால் அது முடக்குவாதம் என்றும், குழந்தைகளுக்கு வரும் வாதம் இளம்பிள்ளை வாதம் என்றும், உடலின் கழுத்து அல்லது கை மற்றும் விரல்களின் செயல்பாட்டை மட்டும் தனியாக நிறுத்துவது பாரிசவாதம் என்றும் ,  அண்ட வாதம், தமரக வாதம் என்று மொத்தமாக 80 வகையான வாத  நோய்களை சித்தர்கள் பட்டியலிட்டிருக்கின்றனர். பக்கவாதம் வரும் முன்பே இதை எந்த அலோபதி மருத்துவ பரிசோதனையாலும்  கண்டுபிடிப்பது கடினம்.

ஆனால் பக்கவாதம் வரும் முன்பே சித்தர்கள் கூறிய சில அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் எப்படி என்றால் இடுப்பிற்கு மேல் எறும்பு ஊர்வது  போல் உணர்வு ஏற்படும் எந்தவிதமான வலியும் வேதனையும் இருக்காது. சிலருக்கு கைகளில் இருந்து தோல்பட்டை வழியாக முகம் வரை இது போல் லேசான எறும்பு ஊர்வது போல் அறிகுறி தோன்றும் இதுதான் பக்கவாதத்திற்கான முதல் அறிகுறி. சிலருக்கு இது போன்று ஏற்படும் உணர்வு தொடர்ச்சியாக தூங்கும் போது ஏற்படும் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறை இதே போல் ஏற்படும். இரத்தக்கொதிப்பு வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தாலும் உடனடியாக பக்கவாதத்திற்கு கொண்டு செல்லும். அலோபதி மருத்துவர்களிடம் போய் எறும்பு ஊர்வது போல் இருக்கிறது என்றால் உடனடியாக அவர்கள் கூறுவது எலும்பு தேய்மானம் அடைந்திருக்கும் என்பது தான் ஆனால் இது பக்கவாதத்திற்கான அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் சித்தர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் 80 வகையான வாதமும் நம்மை வராமல் தடுக்கும் ஒருமுறையைப் பற்றி எழுதி வைத்திருக்கும் பாடலைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

சிரசின் உள்ளே தானியியங்கும் மூளையப்பா
 சீரான அறிவை மட்டும் கொடுக்காதடா
 அவன் தான் உடலை நிர்வகிக்கும் மந்திரியப்பா
 ஆதியான அவன் செயலை விடுத்தால் உடல் நடுங்குமடா
 முகம் முதல் நாடி நரம்பு வரை இழுக்குமப்பா
 முத்தான வைத்தியனிடம் போனால் கர்மம் என்பானடா
 தொழுது வணங்கி அவனிடம் மருந்து கேட்டாளப்பா
 தொட்டு தொட்டு தடவிப்பார்த்து விழிப்பான் போகாதடா
 நேர்மையுள்ள என் மகனே உனக்காகச் சொன்னேப்பா
 நேரான வாதந்தான் மொத்தமாக எண்பதிற்குமடா
 ஆய மரத்தின் பட்டையோடு ஏலம் சுக்கு மிளகு பூண்டு சேர்த்தப்பா
 ஆறவே காய்ச்சி தொடர் மூன்று நாள் குடிக்கயதன் பெருமை கேளடா
 மூன்று நாள் அருந்தவே மூன்று திங்கள் உனை யனுகாதடா வாதமப்பா
 மூவுலகும் காலனும் சனைகிச் சரனும் உன் திசை நோக்கானடா
 உடல்நோய் மட்டுமல்ல மன நோயும் மட்டுபடுமப்பா
 உலகில் சொல்லா பனிரெண்டு அதித வியாதியும் பறக்குமடா
 மறைத்து வைத்தார் சித்தரெல்லாம் யாம் சொல்வேன் இதனருமையப்பா
 மனிதகுலத்திற்கு ஆயப்பட்டை கற்பகவிருட்சம் தானடா
         - அகத்தியர் ஏட்டு குறிப்பு

ஒரு மனிதனுக்கு வரும் 80 வகையான வாதத்திற்கும் ஒரே மருந்து தான்  ஆயப்பட்டை, ஏலக்காய், சுக்கு , பூண்டு, மிளகு, போன்ற பொருட்களை  நன்றாக இடித்து காய்ச்சி கசாயம் போல் வைத்து மூன்று நாள் குடித்தால் போதும் மூன்று மாதத்திற்கு நம் உடலில் எந்த வகையான வாதமும் தாக்காது என்பது தான் இந்த மருந்தின் சிறப்பு. முற்காலத்தில் இது  போன்ற ஆயபட்டை வைத்து சுக்கு கசாயம் குடிக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்திருக்கிறது. காலப்போக்கில் இம்மருத்துவ முறை மறைந்திருக்கிறது அதற்கான காரணம் ஆயப்பட்டை தான். தற்சமயம் ஆய மரம் என்ற பெயரே புதுமையாகத்தான் இருக்கிறது. இம்மரத்தின் பட்டை அடர்ந்த காடுகளின் ஒரு சில பகுதிகளில் கிடைக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆயப்பட்டையை கண்டுபிடித்து ஜெர்மனியில் வாழும் தமிழர் ஒருவருக்கு இதே போல் பக்கவாதத்திற்கான அறிகுறி இருந்து மூன்று முறை மருந்து எடுத்த உடனே குணம் அடைந்துள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்து கொள்கிறோம். அத்துடன் இந்தப் பட்டையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று சோதித்து தெரிவிக்கும்படி கூறி இருந்தோம் அதற்கு அவர் இதை அங்குள்ள சோதனைக்கூடத்தில் சோதித்து உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள இம்மருந்து பெரிதும் துணை புரிகிறது அத்துடன் மூளையின் இரத்தை ஓட்டத்தையும் சீராக வைத்துக்கொள்கிறது என்றார்.

எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத இந்த மருந்தின் அரிய  தகவலை இந்திய மருத்துவ கவுன்சிலிருக்கு தெரியப்படுத்தி இருந்தோம் ஏன், என்ன மருந்து என்று கூட கேட்கவில்லை, மக்களை நோயிலிருந்து காக்க வேண்டிய அக்கறை இவர்களுக்கு இல்லை என்று விட்டுவிட்டோம். சமீபத்தில் தமிழகத்தில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை பார்த்த போது அவர் படும் வேதனையை வார்த்தையால் விவரிக்க கூட முடியவில்லை. ஒரு மனிதனுக்கு வரக்கூடாத கொடிய நோய் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

பக்கவாதத்தை நீக்கும் ஆயப்பட்டையை மக்களுக்கு நம் இயற்கை உணவு உலகத்தின் வழியாக இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது தான் நமது எண்ணம். விலைமதிக்க முடியாத இந்தப் பட்டையை பெற எத்தனையோ நாடுகளில் உள்ள நபர்கள் வந்து பேசினாலும் இதை விலைக்கு கொடுக்க  ஒருபோதும் நமக்கு விருப்பம் இல்லை. நம் இயற்கை உணவு  குடும்பத்தில் எதையும் எதிர்பார்க்காமல்இணைந்து கொள்ள என்ற பக்கத்தை சொடுக்கி இணைந்துள்ள 20 ஆயிரம் பேர்களில் முகவரி மற்றும்  சரியான விபரங்கள் இல்லாத நபர்களை எல்லாம் நீக்கி மொத்தமாக 5  ஆயிரம் பேர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த 5 ஆயிரம் பேர்களில் முதலில் 100 நபர்களாக பிரித்து இம்மருந்தை இலவசமாக  கொடுக்கலாம் என்று இருக்கிறோம். இந்தப்பதிவு வெளிவந்த பின் இணையும் நபர்களுக்கு அடுத்த வெளிவரும் வேறு மருந்திற்குதான்  முக்கியத்துவம் கொடுக்கப்படும். இம்மருந்திருக்கு நம் பழைய வாசகர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்படும். சித்தர்கள் மறைத்து வைத்து வைத்த இந்த ஆயப்பட்டை மனிதர்களுக்கு ஒரு கற்பக விருட்சம் தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

மருந்து வாங்கிக் கொண்டு நன்றி உணர்வே இல்லாமல் செல்லும் ஆடு மாடுகளுக்கு கொடுப்பதை விட நம் வலைப்பூவில் இணைந்துள்ள உண்மையான உறவுகளுக்கு இன்னும் பல மருந்துகளை இறைவன் அருளால் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் அவர்களுக்குத்தான் நம் மருந்தின் முக்கியத்துவம் தெரியும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை ஏற்கனவே நம் வலைப்பூவில் இணைந்துள்ளவர்கள் மட்டும்  நிரப்பி அனுப்பவும்.

28.09.2016 -க்கு முன் நம் வலைப்பூவில் இணைந்துள்ளவர்களுக்குத் தான் இந்த மருந்து கொடுக்கப் போகிறோம். ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்கள் முகவரியும் இப்போது கொடுத்திருக்கும் முகவரியும் சரியாக இருந்தால் தான் உங்களுக்கு மருந்து கிடைக்கும்.  சென்னையில் உள்ள நம் வாசகர் ஒருவரின் வீட்டில் அவர் மூலமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமையில் குறிப்பிட்ட நேரத்தில் மருந்து கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.   எப்போது எங்கு மருந்து வாங்க வேண்டும் என்ற விபரம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இமெயில் மூலம் அனுப்பப்படும்.

 

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: