வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2 ம் வட்டாரத்ததை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸின் முன்னாள் தலைவரும் பரிஸ் ஸ்ரீ மகால் வர்த்தக நிறுவனத்தின் அதிபருமான திரு செல்லத்துரை சிறீபாஸ்கரன் அவர்களது தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் சார்பில் அன்னாருக்கு எமது இறுதி வணக்கத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்திக்கொள்கின்றோம். மேலும் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரதும் துக்கத்தில் நாமும் பங்கு கொள்வதோடு அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து அன்னாரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் குடும்பத்தாரால் பின்னர் அறிவிக்கப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்