தமிழ் கூறும் நல்லுலகின் இலக்கணப் பண்டிதர்களில் ஒருவரும் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான திரு சங்கரப்பிள்ளை குமரேசையா (சரவணை மேற்கு) அவர்கள் 20-08-2016 சனிக்கிழமையன்று கனடாவில் காலமானார்.
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் சார்பில் அன்னாருக்கு எமது இறுதி வணக்கத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்திக்கொள்கின்றோம். மேலும் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரதும் துக்கத்தில் நாமும் பங்கு கொள்வதோடு அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து அன்னாரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் குடும்பத்தாரால் பின்னர் அறிவிக்கப்படும்.
Balasundaram Ponambalam (vccosacanada@gmail.com)
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்