நெஞ்சு வலி அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், இதய நோயைக் கண்டறியலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் இதய நோய் இருப்பதை உடலின் வேறுசில அறிகுறிகளைக் கொண்டும் அறிய முடியும்.
அவை நமக்கு சிறிய பிரச்சனைகளாக இருந்தாலும், அவையும் இதய நோய் இருப்பதை மறைமுகமாக உணர்த்தும். நீங்கள் உங்களுக்கு இதய நோய் உள்ளதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, அந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனே மருத்துவரை சந்தித்து, உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
கால் மற்றும் பாதங்களில் வீக்கம்
கால் மற்றம் பாதங்களில் நீர் கோர்வை ஏற்படுகிறதா? அப்படியெனில் அதை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். இம்மாதிரியான நிலை இதய நோய் இருக்கும் போது மட்டும் தான் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். இதயம் போதிய இரத்தத்தை அழுத்தாமல் இருக்கும் போது, இரத்த நாளங்களில் இருந்து திரவம் கசிந்து, வீக்கங்களை உருவாக்கும். எனவே உங்களுக்கு அடிக்கடி கால் மற்றும் பாதங்களில் வீக்கங்கள் ஏற்பட்டால், சாதாரணமாக எண்ணாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வழுக்கை
வழுக்கைத் தலை கொண்ட ஆண்களுக்கு 23% இதய நோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது. அதற்காக தலையில் வழுக்கை விழுந்தால், இதய நோய் கட்டாயம் வரும் என்பதில்லை. ஆனால் வழுக்கைத் தலை இருந்தால், இதய நோய் அபாயம் இருப்பதால், அடிக்கடி உடலை மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது.
ஜாந்தோமா
சருமத்தில் ஏற்படும் கொழுப்பு வகைப் பொருட்களின் படிகங்களைத் தான் ஜாந்தோமா என்று அழைப்பர். இது ஒருவருக்கு இருந்தால், அதுவும் இதய நோய்க்கான அபாயத்தை உணர்த்தும் அறிகுறி என்பதை மறவாதீர்கள்.
முக்கியமாக இது பல்வேறு அளவுகளில், மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேலும் இம்மாதிரியான நிலை உடலில் அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இருந்தாலும் ஏற்படலாம்.
வீங்கிய மற்றும் சிவந்த ஈறுகள்
மோசமான வாய் சுகாதாரத்தின் காரணமாக ஈறுகள் வீக்கமடைந்தும், சிவந்தும் காணப்படலாம். இருப்பினும் இவையும் இதய நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே கவனமாக இருங்கள்.
உடல் பருமன்
நீங்கள் எதிர்பாராத அளவில் உடல் அதிகமாக பருமனடைந்தால், அது இதய நோய்க்கு வழிவகுக்கும். அதிலும் உடலின் பல்வேறு பகுதிகளில் நீர்த்தேக்கம் ஏற்படும் போது, உடல் பருமன் தானாக அதிகரிக்கும். எனவே இந்த நிலையில் தவறாமல் மருத்துவரை அணுகி உங்களை சோதித்துக் கொள்ளுங்கள்.
தொடர்ச்சியாக சிறுநீர் கழித்தல்
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுவது சர்க்கரை நோய்க்கு மட்டும் அறிகுறியாக நினைக்க வேண்டாம். அது இதய நோய்க்கும் ஓர் அறிகுறி தான். எனவே நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கண் புரை
கண் புரை என்பது கருவிழியைச் சுற்றி அல்லது கருவிழியின் மேல் ஒரு படலம் உருவாகி, பார்வையை மங்கலாக்குவது. இது பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படும் ஒரு பார்வை கோளாறு. ஆய்வுகளில் கண் புரை உள்ளவர்களுக்கு, இதய நோய் வரும் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கவனமாக இருங்கள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்