சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்
எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்
கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!
சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்
சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்
தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!
கந்தனென்று நானழைக்க வருவான், அவன்
பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்
ஆறுமுகமாகி வந்த ஒருவன்!
அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்
இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்
சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!
ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்
கூறும் அடி யார்கள் வினை களைவான்!
–
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்