கடவுள் எல்லோரையும் தனித்தன்மை கொண்டவர்களாகவே
படைத்துள்ளார், நண்பர்கள் எல்லோரும் ஒரேமாதிரியாக
இருக்க வேண்டுமெனக் கருத வேண்டாம்.
–
மனிதன் ஒருவனைப் படைத்த கடவுளைத்தவிர மற்ற
எவராலுமே அவனைப் புரிந்து கொள்ள முடியாது.
பொது ஜன அபிப்பிராயத்தை வைத்து தனி மனிதனை
எடைபோட வேண்டாம்.
அவன் அவனுக்கு மட்டுமே சொந்தமானவன் நமக்கல்ல.
மற்றவருக்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய
அவசியம் இல்லை நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்
மனம் புண்படாதவாறு புரிய வைத்தால் போதுமானது.
–
நண்பர்களின் ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கட்டும்
ஆனால் அவை உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க
வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணி, உங்கள் முடிவுகள்,
உங்கள் குடும்ப வாழ்க்கை அனைத்தும் உங்களைச் சார்ந்ததாக
மட்டும் இருக்கட்டும்.
–
மனித பரிணாமம் என்பது குழந்தைத்தனமான சுயநிலத்தில்
இருந்து, முதிர்ந்த பெருந்தன்மை வளர ஏற்படுகின்ற
வளர்ச்சியாகும். அதுபோல அன்பின் தேவையில் இருந்து
அன்பை வழங்குவதற்கு வளர்வதே வளர்ச்சியாகும்.
–
எப்படி வாழ்வது, எப்படி கொடுப்பது, எப்படி மகிழ்ச்சியாக
இருப்பது என்பது தெரிந்த ஒருவன் இலகுவாகவே
தலைவனாவான்.
–
மற்றவருக்காக தன்னை அர்ப்பணிக்கின்றபோது, மற்றவர்
மகிழ்ச்சி அடைகின்றவாறு அவர்களுக்கு உதவும்போது மகிழ்வும்
வெற்றியும் வந்தடைகின்றன.
–
நீ விரும்புவதை பெற வேண்டுமானால் மற்றவர் விரும்புவதை
கொடுக்கவும் தயாராக வேண்டும்.
–
நீங்கள் தலைவராக இருந்தால் மனிதர்களுக்கும்,
சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவகையில் உங்களின் அணுகுமுறையை
கையாள வேண்டும். எந்தச் சமயத்தில் எதை கையாள வேண்டுமோ
அதைக் கையாண்டால் தலைவராக நீங்கள் வெற்றி பெறுவது
சாத்தியம்.
–
குடும்பத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அப்பாவாக
இருந்தாலும், அம்மாவாக இருந்தாலும் தெரிந்து கொள்வதில்
மாணாக்கர் போலவும், தேவையை பகிர்வதில் தோழனைப்
போலவும் இருக்க வேண்டும்.
–
——————————————-
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்