• ஓகஸ்ட் 2016
    தி செ பு விய வெ ஞா
    « ஜூலை   செப் »
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,094,173 hits
  • சகோதர இணையங்கள்

12-8-2016 வரலட்சுமி விரதம்!

kannagai_alayam001வரலட்சுமி விரதம்!

 லட்சுமியினை போற்ற அனைத்து வளமும் நலமும் வீட்டில் கூடியேறும். செல்வ வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமியை விரதமிருந்து அவள் அருளை பெறும் நன்னாளே வரலட்சுமி விரதம்.


🌟 இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
🌟 இவ்விரதத்தை, விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். வரலட்சுமி விரத்தின் மூலம் அனைவரின் வீட்டிலும் செல்வங்களை பெருக்கி கொள்ள முடியும்.
புராணக் கதை :
🔔 வளங்களை அள்ளிதரும் வரலட்சுமி விரதத்திற்கு ஒரு கதை உண்டு. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர்களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகன் பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி.
🔔 அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள்.
🔔 அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப்பிடித்து வரத் தொடங்கினாள்.
🔔 அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங்களையும் இழந்தனர். தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள்.
🔔 அக்குடத்தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற்கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள்.
ஹோம மந்திரங்களும் ஹோமத்தின் பலன்களும் :
வாஸூதேவ மந்த்ரம் : வறுமை, சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
விஸ்வரூப மந்த்ரம் : மனோபலம், ஜெயம், ஆசைகள் பூர்த்தியாக.

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: