கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமை, கண்ணுடன் உராய்வதை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. போதிய நீர் இல்லாமல் போவதால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி.
வறண்ட கண்கள் ஏற்பட்டால், கண்களில் நமைச்சல் உண்டாகும். நீர் வழிந்து கொண்டேயிருக்கும். காற்று பட்டால் எரியும். கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும். உடனடியாக வறண்ட கண்களை மருத்துவரிடம் காண்பிக்காவிட்டால் அது எளிதில் தொற்றுக்களை உண்டாக்கும். கண்களை பாதித்து விடும்.
தொடர்ந்து புத்தகம் படிக்கும்போது, அல்லது டிவி பார்க்கும்போது, நீங்கள் கண்களை இமைக்க மறந்துவிட்டால், இதனால் போதுமான திரவம் கண்களில் சுரக்காமல் போய்விடும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.
அது தவிர்த்து, கண்களில் கண்ணாடி அணிவதால், கண்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தால், அல்லது மருந்துகள் உண்டாக்கும் அலர்ஜி ஆகியவற்றாலும் கண்களில் வறட்சி ஏற்படும்.
அதேபோல் மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும் கண்களில் வறட்சி ஏற்படும். ஹார்மோன் மாற்றத்திற்கும், கண்களின் வறட்சிக்கும் தொடர்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொற்று வியாதிகள் :
கண்கள் வறண்டு போவதால் எளிதில் தொற்று ஏற்பட்டுவிடும். தொற்றினால் எரிச்சல், கண்களை திறந்து மூடுவதில் சிரமம் உண்டாதல் ஆகியவை உண்டாகும். ஆகவே கண்களில் வறட்சி ஏற்பட்டால் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்.
வறட்சியிலிருந்து பாதுகாக்க :
உங்கள் கண்கள் வறண்டிருந்தால், உடனடியாக நிவர்த்தி செய்துவிடுங்கள். செயற்கை கண்ணீர் சிகிச்சையின் மூலம் கண்களுக்கு ஈரப்பதம் அளிக்கலாம். ஒமேகா 3 அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். மீன், முட்டை, கேரட், மற்றும் நட்ஸ் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை கண்களில் திரவம் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் கண்களில் எண்ணெய் சுரப்பும் தூண்டப்படும். இதனால் கண்களின் எரிச்சல் குறையும்.
புகை தூசு ஆகியவை கண்களில் படாமலிருக்க கண்ணாடி அணிவது நல்லது. வறட்சி குறையாமலிருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து, தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் கண்களை பாதிக்கும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்