Posted on 3. ஓகஸ்ட் 2016 by mandaitivu
திரு சோமசுந்தரம் சுகிர்தன் |

பிறப்பு : 16 நவம்பர் 1989 — இறப்பு : 28 யூலை 2016 |
<
யாழ். மண்டைதீவுவைப் பிறப்பிடமாகவும், கம்பஹா வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுகிர்தன் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார்,மாபுலம் ஆச்சியின் பேரன் சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தமயந்தி, கௌரி, கரிகாலன், சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2016 ஞாயிற்றுகிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புஞ்சி பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
சாள்ஸ்(மச்சான்- பிரித்தானியா) |
|
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 3. ஓகஸ்ட் 2016 by mandaitivu

மேஷம்
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
என்ற திருக்குறள் கூறும் கருத்தின்படி நீங்கள் வரவிருக்கும் ஒரு வருட காலத்திற்கும் நடந்துகொள்ள வேண்டும். குழி தோண்டுவதற்காக தன்னை வெட்டுகின்ற மனிதனையும் சேர்த்துத் தாங்கிப் பிடிக்கின்ற நிலம் போல, தன்னை அவமதிப்பவர்களிடமும் பொறுமை காட்டி, மன்னித்து அவர்களுக்கு உதவி செய்து வருவதால் மட்டுமே இந்த ஒரு வருட காலத்தில் உங்களால் நிம்மதியான சூழலைக் காண இயலும். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »