முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னையின் மடியில் ஆண்டவன் அரவணைப்பில்
28. 05. 1957 03. 08. 2015
திதி . 23. 07. 2016
ஆண்டு ஒன்று ஆனபோதும் உங்கள் ஆசைமுகம் மறையவில்லை எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே.உங்கள் மனையாளையும் ஈன்றெடுத்த இரு செல்வங்களையும் காத்து நின்ற கலங்கரை விளக்கே.
தாய்க்கு தலைமகனாய் தாய் தந்தை சொல்லை தாரக மந்திரமாய் கொண்டு சகோதர சகோதரிகளை வழி நடத்தி சமூகத்தில் தலைநிமிர்ந்து வீறுநடை போட வழி வகுத்த எங்கள் பாசத்திலகமே,
எங்கள் அண்ணனே உங்கள் கனவுகளையும் கடமைகளையும் நிறைவேற்ற எங்களுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் ஆருயிர் அண்ணரே ,ஓராண்டல்ல எங்கள் உயிர் உள்ள நாள்வரை உங்களை நாம் மறவோம் ,
அல்லும் பகலும் முருகன் நாமத்தை சிந்தையிலே கொண்டு ஆலமரம் போல் விருட்ஷம் கொடுத்தவரே, உங்கள் உடல் மட்டும் எங்களை விட்டு பிரிந்தாலும் நீங்கள் காட்டிய பாசமும் பரிந்துரையும் எங்களை காத்து நிற்கும் ,
என்றென்றும் உங்கள் நீங்காநினைவுகளோடு.
குடும்பத்தினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்