அன்னையே என் அன்னையின் அன்னையே
என் அன்னை என்னை ஈன்றெடுத்தபோது முதல் முத்தென அரவணைத்து அகமகிழ்ந்த நாள் முதலாய் பச்சை உடம்பையும் பாச சேயையும் ஆறு ஐந்து நாள் முதலாய் கண்களில் நெய் நிறுத்தி கனிவுடன் எமைக்காத்த கலங்கரை விளக்கே ,காலன் உமை அணைத்துக் கொண்ட செவ்வி மீளாத்துயரில் இருந்த எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்தியதே அம்மம்மா .
உங்கள் முதுமையில் பக்கம் இருந்து பணி செய்ய பாக்கியம் இன்றி போனதால் பரதவிக்கின்றேன் ,என் ஆருயிர் அத்தையை இழந்து ஆறு நாட்களில் உங்களையும் இழந்து விட்டு துடிக்கின்றேன் அம்மம்மா .
மூன்று நாட்கள் முன்பு தான் தொலைபேசியில் முழுமனதோடு அத்தையின் பிரிவில் வாடும் எனக்கு ஆறுதல் சொல்லி முப்பது நிமிடங்கள் கதைதீர்களே, இன்று என்னை ஆழாத்துயரில் ஆழ்த்தி விடடீர்களே அம்மம்மா . கடல் கடந்த காரணத்தால் உங்கள் மூத்த மகனும் மூத்த பேத்தியும் தூர தேசத்தில் இருந்து கண்ணீர் சிந்துகிறோம் அன்னையின் அன்னையே .
அன்பின் அன்னையின் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
உங்கள் பிரிவால் துயருறும் பேத்தி .
ஸ்ரீகுமாரன் அருள்மொழி
மண்டைதீவு, சுவிஸ்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்