எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?
பொதுவாக இறைவன் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இறைவனை கோயில்களில் பூஜித்து வழிப்பட்டாலும் வீட்டில் கடவுளின் உருவ படத்தை வைத்து வழிபடுவது என்பது சிறந்தது. அப்படி வழிபட எந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம். அப்படி வணங்கினால் என்ன நன்மைகள் என்பதை இங்கு பார்ப்போம்.
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய கடவுள்கள் :
✡ அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். குல தெய்வம் நம்மை கண்ணின்இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.
✡ எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.
✡ ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
✡ மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்க இவரின் படத்தை வைத்து வணங்கலாம்.
✡ அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வர பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
✡ ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படம் வைத்து வணங்கலாம். பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
✡ லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
✡ சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராஜரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமையை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.
✡ அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படத்தை நம் வீட்டில் வைத்து வழிபட வேண்டியது அவசியம். இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
Filed under: Allgemeines |
Ippady Oru Makimai Ella Kadavulukkum Irukkinrathu Enpathu Ithuvaraikkum Enakku Theriyaatha.Inimelaavathu Ithanai Kadaippidippom.Enakku Kadavulkal Mel Nampikkaikal Undu. Anaal Naan Kovilkalukku Porathu Kuraivu, Ellaa Kadavulkalaiyum En Manathil Vaiththu Kumpiduven….