அமரர் சின்னத்துரை சிவஞானம் அவர்கள்
தோற்றம் : 11 மார்ச் 1938 — மறைவு : 25 மே 2016
மண்டைதீவு அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி மாயவனூர், பிரான்ஸ், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சிவஞானம் அவர்களின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பும், ஆன்ம ஈடேற்ற ஆராதனையும்.
எங்கள் குடும்பத் தலைவர்-தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் கடந்த 25-05-2016 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய நிகழ்வும், ஆன்ம ஈடேற்ற ஆராதனையும் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு இல. 882, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி என்னும் முகவரியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் நடைபெறும்.
எங்கள் மீது அன்பும், மதிப்பும் கொண்ட அனைவரையும் இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று நடைபெறும் ஆராதனை நிகழ்வுகளிலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
அன்பின் திருவுருவாய்
எங்களை ஆதரித்த தந்தையே!
இன்முகம் காட்டி இன் சொல் பேசி
எங்களை உருவாக்கிய தெய்வமே!
உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த எம் உத்தமனே!
எம்மை விட்டுச் சென்றாலும் என்றும்
எங்கள் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா!
எப்போதும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்