அமரர் செபஸ்தி பேணாட் அவர்கள்
(முன்னாள் மண்டைதீவு கிராமசபை உபதலைவர், சமாதான நீதவான்)
மண்ணில் : 29 மே 1939 — விண்ணில் : 10 யூன் 2016
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செபஸ்தி பேணாட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
“உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம்
கொள்பவன் இறப்பினும் வாழ்வான்”
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தி வரவணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அத்தனாஸ் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி கிறேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன்(கனடா), வசந்தி(கனடா), சுகந்தி(திருச்சிலுவை கன்னியர்), ஆனந்தி(இலங்கை), சாந்தி(இலங்கை), ஜானகி(இலங்கை), அகிலன்(சுவிஸ்), கமல்ராஜ்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து தேவராசா(ஓய்வுபெற்ற அதிபர்), மேரி பெர்னபேத்தம்மா, செலஸ்ரின்பிள்ளை, மற்றும் சிப்பிரியான்(சுவீடன்), லில்லி மாக்ரேட், றீற்றம்மா, றெஜினா, எட்மன்(வவுனியா), காலஞ்சென்ற ஜோசப் ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆனந்தி, இம்மானுவேல்(யோகன்), இராஜசேகர், செபஸ்ரியன், அனிஸ்லி, நிஸாந்தினி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மரியதாஸ், டெய்ஸி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, சுவீதா, ஜோனத்தன், றெனி, நிலாந்தி, கெனி, தக்ஷிகா, நிலுக்ஷிகா, தக்ஷன், நிருஷன், கிஷாறன், தமிறா, மிதுஷா, ஹறின், சதுஷன், கபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இல. 119, வேம்படி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 13-06-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் அவரது 31ம் நாள் ஆன்ம இளைப்பற்றிக்கான நினைவுத் திருப்பலி 09-07-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் St. Francis Xavier Church, 5650 Mavis Road, Mississauga, Canada இல் ஒப்புக்கொடுக்கப்பட்டு, 7046 Magistrate, Mississauga, Canada இல் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தந்தையின் இழப்பின்போது தொலைபேசி, முகப்புத்தகம், இணையத்தளம் மூலமாகவும், நேரிலும் எம் துயரில் பங்கு கொண்டு எமக்கு ஆறுதல் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14166938073
வசந்தி இம்மானுவேல்(யோகன்) (மகள்) — கனடா
தொலைபேசி: +19056708354
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்