• ஜூன் 2016
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,851 hits
  • சகோதர இணையங்கள்

வேகமாக கலோரி எரிக்கும் 5 பயிற்சிகள்…

உடல் எடையைக் குறைக்க, சிலர் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள். சிலர், அதிக உடற்பயிற்சியில் ஈடுபட்டு, தங்களை வருத்திக்கொள்வர். இந்த இரண்டையும் தனித்தனியாகப் பின்பற்றினால், பலன் கிடைப்பது தாமதமாகும். ஆனால், இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் பலன் விரைவில் கிடைக்கும். உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும்.

டிரெட் மில்

p12b(2)

ஒரு மணி நேரத்துக்கு ஆறு கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் நடக்க ஏற்றவாறு செட்டிங்கை மாற்றி, சற்று வேகமாக நடக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியில் அரை மணி நேரத்தில் 350 கலோரிகள் வரை எரிக்க முடியும். டீன் ஏஜில் இருந்து டிரெட்மில் பயிற்சி செய்யலாம்.

இந்தப் பயிற்சியில் உடல் முழுவதும் உள்ள கொழுப்பு சீராகக் குறையும்.

நுரையீரல் மற்றும் இதயச் செயல்பாடுகளைச் சீராக்கும். சி.ஓ.பி.டி., மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

உடலில் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மை அதிகரிக்கும். இதனால், வொர்க்அவுட் செய்வது எளிதாகும்.

ரோவிங்

p12c(2)1

இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், அரை மணி நேரத்தில் 377 கலோரிகளை எரிக்கலாம்.

இந்தப் பயிற்சியில் வேகமாக முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டே இருப்போம் என்பதால், இடுப்புப் பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

‘கோர்’ தசைகள் வலுவடையும். இதன் மூலம், தசைகளில் எளிதில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

முழு உடலுக்கான பயிற்சி இது. எனவே, உடல் உறுதியாகும். உடல் எடை குறைப்பவர்களுக்கு ஏற்ற பயிற்சி.

கயிற்றை நன்றாக வேகமாக இழுக்கும்போது, முன் கையில் இருக்கும் தசைகள் வலுப்பெறுகின்றன.

எலிப்டிக்கல் ட்ரெய்னர்

p13a(1)

கை, கால் இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்துச் செய்யும் பயிற்சி இது.

அரை மணியில் சுமார் 370 கலோரிகள் வரை எரிக்க முடியும். வீட்டிலேயே இந்தக் கருவியை வைத்தும் பயிற்சி செய்யலாம்.

முழு உடலுக்கான கார்டியோ வொர்க்அவுட்களில் சிறந்த பயிற்சி இது. இந்தப் பயிற்சியில் உடல் முழுவதும் இயங்கும்.

கைப்பிடியில் கையைப் பிடித்துக்கொண்டு, வெறுமனே கால்களால் நடக்கக் கூடாது. கைகளை நன்கு அசைக்க வேண்டும். இதன் மூலம், தோள்பட்டை நன்றாக வலுவடையும்.

‘கோர்’ தசைகள் வலுப்பெறும். மலை ஏறுவதுபோல இதில் செட்டிங் மாற்றிக்கொள்ளலாம். இதயத் தசைகள் வலுப்பெறும்.

ஸ்பின் பைக்

p14a

கிட்டத்தட்ட சைக்கிள் ஓட்டுவதுபோன்ற பயிற்சிதான். இந்த பைக்கை நாம் ஓட்டும்போது, டிஸ்க் வடிவத்தில் ஒரு தட்டு சுற்றிக்கொண்டே இருக்கும்.

அமர்ந்த நிலையில் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

நடைப்பயிற்சிகூட செய்ய முடியாத அளவுக்கு மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் பயிற்சியைத் தாராளமாகச் செய்யலாம்.

அரை மணி நேரத்தில் அதிகபட்சம் 440 கலோரிகள் வரை எரிக்க முடியும். கால் தசைகள் வலுவாகும், மூட்டு உறுதியாகும்.

ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளவர்கள், இந்தப் பயிற்சியைச் செய்ய வலி குறையும்.

நீச்சல்

p14b

நீச்சலை ஒரு பயிற்சியாகச் செய்ய விரும்புபவர்கள், நல்ல நீர்நிலைகள் அல்லது நீச்சல் குளம் போன்றவற்றில் செய்வதே சிறந்தது.

அரை மணி நேரத்தில் சுமார் 410 கலோரிகள் வரை எரிக்க முடியும். பயிற்சி செய்த உணர்வே இருக்காது.

உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும், ஸ்டாமினா எனப்படும் உடல் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

இதயம் மற்றும் நுரையீரல் பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். சுவாசக் கோளாறுகள் தடுக்கப்படும்.

நீச்சல் ஒரு சிறந்த கார்டியோ பயிற்சி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்ய ஏற்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: