கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று 25.05.2016 இயற்கை எய்தினார்.
மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950 களில் வன்னியை நோக்கிய படித்த வாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார்.
நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார்.
மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர் இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்கால் ஊடாக வெளியேறி ஜரோப்பாவில் சிறிது காலம் வாழ்ந்தார் . மீண்டும் தாயகம் திரும்பிய இவர் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 78வது வயதில் இயற்கை எய்தினார்.
அன்னாரது இறுதிக் கிரிகைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகிறது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்