அன்னையர்கள்.
பிரதி வருஷம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல் பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு ஆதரியுங்கள். பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான் அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்மனைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.
முதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள். ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். இது பொதுவான வேண்டுகோள். அன்னையர் தின உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். வாழ்க அன்னையர் தினம். வளர்க மக்களின் அன்பு.
8—5—2016 அன்னையர்தினம். போற்றுங்கள் அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்