8ஆம் ஆண்டு நினைவலைகள்
அமரர் உயர்திரு. சின்னத்தம்பு வைரவநாதன் அவர்கள்.
பிரபல புகையிலை வியாபாரி, மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி
அம்மன் ஆலய முன்னாள் அறங்காவல் சபைத்தலைவர்
மலர்வு 04- 04-1936 திதி திதி நாள்
உதிர்வு 27-03-2008 அபரபட்ச ஷஷ்டி 29-03-2016
தூக்கத்தில் வரும் கனவு காட்சியாகும்
தூங்காமல் வரும் கனவு இலட்சியமாகும்
அப்துல் கலாமின் அழகான அறிவாயுதம் – இதை
அப்பாவிடம் தான் ஆதியில் கற்றோம்
கணமேனும் நிற்காத கடிகார முள்ளாக
தினம் தினம் ஓடி தனம் தந்த தலைவா
மணம் வீசும் மலரே, மங்காத ஒளியே
தவம் இன்றி நாம் பெற்ற வரமே
ஊர் கூடி ஒற்றுமை தேர் ஒன்றை இழுக்க
நேர் நின்று சீர் செய்த நெறியாளன்
நீர் இன்றி வாடும் பயிர்களுக்கு கார்
முகில் போல் கருனையாளன்
ஈர் நான்கு ஆண்டுகள் உன் குரல் கேட்காமல்
ஏங்கி தவிக்கும் இதயங்கள் குரல் இது
எத்தனை வருடங்கள் எம்மை கடந்து சென்றாலும் – எம்
பத்தரைப் பசும் பொன்னை நாம் மறந்து போவோமா?
நித்திரை நேரமும் நினைவகலா நித்திலமே
எத்திரை மறைந்தாலும் எம்மில் நீ வாழ்வாய்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்