• மார்ச் 2016
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,697 hits
 • சகோதர இணையங்கள்

உடல் எப்போதும் அசதியாக இருக்கிறதா?

உடல் எப்போதும் அசதியாக இருக்கிறதா?
சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள்.உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம்.

இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை சீக்கிரம் போக்கலாம்.

* அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். இதை தினமும் சாப்பிடலாம்.

* அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும். இதை காலையில் சாப்பிடும் கூடுதல் பலன் கிடைப்பதை காணலாம். அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.

* மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.

* உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.

* உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

* பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும். இதை தினமும் செய்யலாம். தண்ணீரில் ஊறவைத்து குடிக்க பிடிக்காதவர்கள் சூடான பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

ஒரு பதில்

 1. Nalla Maruththuvam Thaan…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: