Posted on 26. மார்ச் 2016 by mandaitivu
8ஆம் ஆண்டு நினைவலைகள்
அமரர் உயர்திரு. சின்னத்தம்பு வைரவநாதன் அவர்கள்.

பிரபல புகையிலை வியாபாரி, மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி
அம்மன் ஆலய முன்னாள் அறங்காவல் சபைத்தலைவர்
மலர்வு 04- 04-1936 திதி திதி நாள்
உதிர்வு 27-03-2008 அபரபட்ச ஷஷ்டி 29-03-2016
தூக்கத்தில் வரும் கனவு காட்சியாகும்
தூங்காமல் வரும் கனவு இலட்சியமாகும் Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 26. மார்ச் 2016 by mandaitivu

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்,
வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது
மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு
குளிரச் செய்யும்.
–
வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால்
மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே
குளிர்ந்து இருக்கும்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 26. மார்ச் 2016 by mandaitivu
திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் .
தோற்றம் : 7 செப்ரெம்பர் 1924 — மறைவு : 24 மார்ச் 2016

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 22. மார்ச் 2016 by mandaitivu
திரு வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள்
(இளைப்பாறிய நீதிமன்ற முதலியார் – இலங்கை)
அன்னை மடியில் : 1 சனவரி 1930 — இறைவன் அடியில் : 20 மார்ச் 2016

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 20. மார்ச் 2016 by mandaitivu

வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம். நார்ச்சத்துக்கள், பொட்டாஷியம், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை நிறைந்துஇருப்பதால், எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.
ஆன்டிஆக்சிடன்ட் உள்ளதால் இதயம் தொடர்பான நோய்கள், மூட்டுவாதம், புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படும். எலும்பு, பல் ஈறுகளை உறுதிசெய்யும். 30 வயதுக்கு மேல் வரும் கண் கோளாறுகளைக் குறைக்கும். கரோட்டீன் மிகுந்திருப்பதால், பார்வைத் திறன் அதிகரிக்கும். முடி உதிர்தல் நிற்கும்.
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 17. மார்ச் 2016 by mandaitivu
உடல் எப்போதும் அசதியாக இருக்கிறதா? |
|
சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள்.உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம்.
இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை சீக்கிரம் போக்கலாம்.
* அன்னாசிபழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். இதை தினமும் சாப்பிடலாம்.
* அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும். இதை காலையில் சாப்பிடும் கூடுதல் பலன் கிடைப்பதை காணலாம். அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
* மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.
* உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.
* உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
* பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும். இதை தினமும் செய்யலாம். தண்ணீரில் ஊறவைத்து குடிக்க பிடிக்காதவர்கள் சூடான பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம். |
Filed under: Allgemeines | 1 Comment »