• பிப்ரவரி 2016
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  29  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,697 hits
 • சகோதர இணையங்கள்

நோய்களை தவிர்க்கும் வழிமுறை

rain-2

 

தனிப்பட்ட சுகாதாரம் நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாத தினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரிசிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு ( டூத்டிகே ), வயிற்றுப்போக்கு ( டையேரியா ) மற்றும் ரத்தபேதி ( டிசென்டரி ) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ள

பழகுவதன் மூலம் ஏற்படாமல் தடுக்கலாம்.

தலையை சுத்தம் செய்தல் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஷாம்பு அல்லது சீகக்காய் உபயோகப்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

கண், காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல் சுத்தமான தண்ணீரை கொண்டு தினமும் கண்களை கழுவவேண்டும். காதுகளில் குறும்பி (வாக்ஸ்) எனப்படும் பொருள் உருவாகி காற்று செல்லும் வழியினை அடைக்கிறது. இது வலியை ஏற்படுத்தும். எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதினால் ஏற்படும் பொருள் மூக்கு துவாரத்தை அடைத்துக்கொள்ளும். எனவே தேவைப்படும் போதெல்லாம் மூக்கினை சுத்தம் செய்யவேண்டும். சிறுபிள்ளைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும் போது மென்மையான துணியினைப் பயன்படுத்தி மூக்கினை சுத்தம் செய்யவேண்டும்.

வாயினை சுத்தம் செய்தல் மென்மையான பல் பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை பற்களை சுத்தம் செய்வதற்கு உகந்தவைகள். தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் என இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்யவும். கரித்தூள், உப்பு, கரட்டுத் தன்மை கொண்ட பற்பொடி இது போன்ற பிற பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்யும் போது பற்களின் வெளிப்படலத்தில் கீறல்கள் ஏற்படுத்தும்.எந்தவொரு உணவுபொருளையும் உட்கொண்ட பின்னர் சுத்தமான தண்ணீரைக் கொண்டு வாயினை கழுவவேண்டும். இவ்வாறு செய்வது, உணவுப் பொருள் பற்களின் இடையில் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவது, பல் ஈறுகளை கெடுப்பது மற்றும் பல் சொத்தை (அ) பற்சிதைவு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.சத்தான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்புப்பொருட்கள், சாக்லெட், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற உணவுகளை குறைந்த அளவிலேயே உட்கொள்ளவேண்டும்.பற்சிதைவிற்கான அறிகுறிகள் காணும் போது பல் மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

தோல் பராமரிப்பு தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது. தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள் அடைபடுகிறது. இதன் விளைவாக புண்கள் (சோர்ஸ்) மற்றும் பருக்கள் (அக்கி) போன்றவைகள் ஏற்படுகின்றன. தோலை சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பினை கொண்டு குளிக்க வேண்டும்.

கைகளைக் கழுவுதல் உணவு உட்கொள்வது, மலம் கழித்த பின் மலவாயினை சுத்தம் செய்வது, மூக்கினை சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளுவது போன்ற எல்லா செயல்களையும் நாம் கைகளைக் கொண்டு செய்கிறோம். இது போன்று செய்யும் போது, பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நகங்களின் கீழ் மற்றும் தோலின் மேற்பரப்பில் தங்கியிருக்கும். இது போன்ற செயல்களுக்குப்பின், மிக முக்கியமாக சமைப்பதற்கு முன், கைகளை (கை மணிக்கட்டிற்கு மேல், விரல் இடுக்குகள் மற்றும் நகச்சந்துகள்) சோப்பு கொண்டு கழுவுவது, பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது. நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நகங்களை கடிப்பது மற்றும் மூக்கை நோண்டுதல் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். பிள்ளைகள் மண்ணில் விளையாடுவர் எனவே உணவிற்கு முன் கைகளைக் கழுவ கற்பிக்க வேண்டும். கழிவறை, குளியலறை மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும். உணவு மற்றும் சமையலின் போது சுகாதாரம் சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதினால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல், மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம். சமைக்கும் பகுதி மற்றும் சமையல் சாமான்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்.அழுகின மற்றும் கெட்டுப்போன உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். சமைப்பதற்கு முன்பு மற்றும் பரிமாறும் முன்பு கைகளைக் கழுவவேண்டும். காய்கறி போன்ற உணவுப்பொருட்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும். உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து வைக்கவேண்டும். உணவுப் பொருட்களை வாங்கும் முன் எந்தநாள் வரை அந்த பொருளினைப் பயன்படுத்தலாம் என்ற விவரத்தை பார்த்து வாங்கவும் சமையலறைக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தவும்.

மருத்துவ சுகாதாரம் (அ) நலன் காயம் ஏற்பட்டால், சரியான சுத்தமான பேன்டேஜ் / துணியினை உபயோகித்துப் பராமரிக்கவேண்டும். மருந்துகளை வாங்கும் போது அம்மருந்து செயல் இழக்கும் தேதி என்ன என்பதனை பார்த்து வாங்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: