• திசெம்பர் 2015
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,140 hits
 • சகோதர இணையங்கள்

வீரியமான வெங்காயம்

காயம் என்ற சொல்லுக்கு கறி வாசனைச் சரக்கு என்று அர்த்தமாகும். வெங்காயம் என்றால், அது வெண்மையான காயம் என்பதாகும். உள்ளி எனவும் இதை இயம்புவார்கள். பூண்டு இனம் சார்ந்தது இது என்ற இனிய உரையும் உள்ளது.

காலத்தால் கணிக்க இயலாத ஓர் ஒப்பற்ற மூலிகை சின்ன வெங்காயம் (சிவனுள்ளி), பெரிய வெங்காயம் (பெல்லாரி), வெள்ளை வெங்காயம் ஆகிய மூன்று ரகங்களிலே பவனி வருகின்றது. சமையலின் போது சைவ, அசைவ உணவுப் பதார்த்தங்கள் அனைத்திற்கும் இவை அரும் துணைப்பொருட்களாக அமைந்துள்ளன. இவை தாமச (கால நீட்ட) உணவாக உள்ளதால், உடம்பின் புலன் உணர்வுகளை உற்சாகப்படுத்துகின்றன. உயிர்ச்சத்துக்களும், அமிலச் சத்துக்களும் இவற்றில் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நோய்க் கிருமிகளை நசுப்பிக்கும் என்பது மருத்துவ ஆய்வுரை, இரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது இவை என்கிறது ஆயுர்வேதம். வெங்காய விவசாயத்திற்குத் தரமான காற்று, வளமான மண் மிக அவசியமாகும். வெங்காயச் செடியின் வயது ஏறத்தாழ நூறு நாட்களாகும்.
ஒவ்வொரு நாற்றுக்கும் நீள வாக்கில் முப்பது சென்டி மீட்டரும், அகல வாக்கில் பத்து சென்டி மீட்டரும், இடைவெளி இட வேண்டும். மேலுரமிட்டு அவ்வப்போது நல்ல தண்ணீர் விட வேண்டும். நட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து பூக்கும் பூக்களை அகற்ற வேண்டும். இலைகள் வாடி உலர்ந்த பின்பு செடிகளைத் தோண்டி எடுத்து, நிழலான இடங்களில் ஐந்து நாட்களுக்கு காய வைக்க வேண்டும். இதுவே விவசாய முறை. வளி (உடலில் வாத வதை), அழல் (எரி உணர்ச்சி), ஐயம் (சரீர சந்தேகப் புலன்) ஆகிய மூன்று குறைகளையும்
முறிக்கின்ற திரி தோஷச் சமனிப் பொருளாக வெங்காயம் உள்ளது. இவ்வாறு சித்த மருத்துவம் சித்தரிக்கிறது.
வெப்பம், வெப்பக் கடுப்பு, மூலம், பித்தம், தாகம், கிரந்தி (அல்சர், வீக்கம், புண்) ஆகியவை வெங்காயத்தால் அகலும் என்று பதார்த்த குண சிந்தாமணி நூற் பாடல் சிறப்பிக்கின்றது. சிரங்கு, உஷ்ண பேதி முதலானவற்றுக்கும் வைத்தியப் பண்டமாக வெங்காயம் விளங்கிடுமாம். வெங்காயத்திலுள்ள ‘அலைன் புரோஸ்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெயே மருத்துவக் காரத் தன்மைக்கு காரணியாக அமைகின்றது. இது விஞ்ஞானிகளின் விளக்கம். வெங்காயத்தை நசுக்கி இரவில் முகர்ந்தால் அயர்ந்த தூக்கம் வரும். காலை மாலை முகர்ந்தால் சளி நீங்கும். மூக்கிலிருந்து நீர் வடிதலும் நின்று விடும். வெங்காயச்சாறை அதே அளவு விளக்கெண்ணெயில் கலக்கி, சூடாக்கி, ஆறிய பின், ஒரே ஒரு துளி கண்களில் விட்டால், கண்வலி, கண் சிவப்பு குணமாகும் என்றும், இதனால் கண் பார்வை மங்கல் நீங்கும் எனவும் மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
வெங்காயத்தில் மிக சிறப்பாக அமைந்துள்ள ‘அமிலோ’ அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுமாம். வெங்காயச்சாறை வியர்வைக்குரு மீது தொடர்ந்து தடவ குணம் காணலாம். வெங்காயத்தில் பொதிந்துள்ள ‘தையோசில்பனேட்’ என்பது தாம்பத்ய உறவைப் பலப்படுத்துகிறது என்பது ஏற்றம் மிகுந்த சித்தாந்தமாகும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: