எங்களை பாசத்துடன் அரவணைத்து
வாழ்ந்த அன்புத் தெய்வமே!
உங்கள் பிரிவு எங்களால் தாங்க முடியவில்லை
எங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள்
எங்களோடு இணைந்து இருப்பீர்கள்
எங்கள் உள்ளங்களில் நீங்கள் வாழ்வீர்கள்
முப்பத் ஓர்நாள் வந்தபோதும் உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சில் பசுமையானதாக திகழ்கிறது இவையாவையும் என்னும் போது எல்லோர் நெஞ்சங்களும் வலிக்கிறது
எம்மை விட்டு சென்றிருந்தாலும்
இறைவனிடம் ஒன்றினைய நாங்கள் இறைவனிடம் பிராத்திக்கின்றோம் …
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்
பாவியாகி விட்டோம் அண்ணா பரதவிக்கின்றோம் அண்ணா பிரிவால்
உயிர் பிரியும் போதேனும் உடன் இருக்க முடியாதா பாவிகள் உயிர் இருக்கும் வரை உள்ளம் ஆறாத கவலை அண்ணா
அடுத்த ஜென்மம் மீது நம்பிக்கை இல்லை
ஆனால் இனி ஒரு பிறவி எமக்கு இருந்தால்
எங்களுக்கு நீங்களே அண்ணனாய் வரவேண்டும்
சொர்க்கம் என்று ஒன்றிருந்தால்
அண்ணா அங்கே தான் நீங்கள் இருப்பீர்கள்
அங்கும் இறைவன் தொண்டாற்றி உங்கள் மனையாளையும்
நீங்கள் பெற்ற இரு முத்துகளையும் சகோதரகளையும்
என்றும் நல்வழி படுத்துங்கள் அண்ணா
நீங்கள் இறைவன் அழைப்பை ஏற்று சென்றுள்ளீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் , சகோதரங்கள் .
Filed under: Allgemeines |
Siva Aththan engalai viddu pirinthu inrodu 31 naadkal aakividdathu avarin ninaivukal engalai viddu innamum piriyavillai..Siva Aththanin Aathma Shanthi Adaiya Sri Muththumaari Ammanai Piraarththikkinren… Anbudan Ungal Machchan Rajah Thavam Germany