யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராஜசேகரம் அவர்கள் 15-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமலர்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரூபதாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா(ஓய்வுபெற்ற எலக்ரிக்கல் என்ஜினியர்- யாழ். மாநகர சபை), பரராஜசிங்கம்(வவுனியா), வசந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபாமணி, ஸ்ரீகாந்தா, யோகேஸ்பரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மராஜா, குகேஸ்வரராஜா, பாலேந்திரராஜா, சௌந்தரராஜா, கோணேஸ்வரராஜா, இரவீந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயராணி, சறோஜினிதேவி, புதுமலர்ச்செல்வம், சின்னம்மா, சத்தியஜீவா, சுசந்தி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
ராஜ்குமார், Dr.இந்திரநாத், காயத்திரி, தினேஸ்குமார், சதீஸ்குமார், சுரேஸ்குமார், நவீனன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தேவா, Dr.கவிதா, சிவகணேசன், சுகிர்தா, சுதாமதி, Dr.கிருஷாந்தி, திரஜாபன், நிமேஸ், உமேஸ், தியானா, இரம்யா, தர்மிகன், கஜந்தன், கஜந்தினி, யோகதர்மினி, யோகதர்சினி, ஜதுசன், சத்தியன், நிர்ஜா, கீர்த்தனா, கபில்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயானி, சச்சின், ஜோதனா, விஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-08-2015 திங்கட்கிழமை, 18-08-2015 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையிலும், 19-08-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-08-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4A, அரசதொடர்மாடி,
பம்பலப்பிட்டி,
கொழும்பு. |
துயர்பகிர்வு
மண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை இராஜசேகரம்
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.