யாழ் தீவகம் மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 06.07.2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து விஷேட திருவிழாக்கள் தினமும் நடைபெற்று-13.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு எம்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
மண்டைதீவு முகப்பு வயல் முருகப்பெருமானின் தேர்த்திருவிழாவினைக் காண-மண்டைதீவிலிருந்தும்-மண்டைதீவுக்கு வெளியேயிருந்தும்-அதிகமானோர் வந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது-முகப்பு வயல் முருகப்பெருமானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு-மண்டைதீவு மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால்-தாகசாந்தி தீர்த்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அனுசரணை
மண்டைதீவு முகப்பு வயல் முருகப் பெருமானின் வருடாந்த தேர்த்திருவிழாவினை-நேர்த்தியாக,(வீடியோ மற்றும் நிழற்படங்களை)பதிவு செய்து வெளியிடுமாறு-ஊர்பற்று மிக்கவரும்-ஆலயப்பணிகளுக்கு முன்னின்று உதவி வருபவருமாகிய,எமது அன்புக்குரிய திரு ஜெயசிங்கம் (கனடா)அவர்களின் வேண்டுகோளின் பேரிலும்-நிதி அனுசரணையிலுமே-இப்பதிவு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
வீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும்
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்