• ஜூன் 2015
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,697 hits
  • சகோதர இணையங்கள்

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு

 
 
ஆனி உத்தர திருமஞ்சன தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 24.06.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

படங்கள் : லக்கீஷன் – திருவெண்காடு மண்டைதீவு
 
 
 
 
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு – இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)
 
“மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
  அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே”
 
 
 
மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே!
ஆனி உத்தர திருமஞ்சன தரிசனத்தையொட்டி  அருள்மிகு  ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி  திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு   பூலோக கைலாய தரிசனம்  கொடுத்தார்கள்.
 
 

திருவெண்காட்டில் ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிவகாமிஅம்பாளுக்கு ஆனி உத்தர திருமஞ்சன மகாபிஷேகம் 24.06.2015 ! ! ! சிறப்பு கட்டுரை

 
ஓம் கம் கணபதயே நமஹ…!!


 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 “திருச்சிற்றம்பலம்” ” திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: