கண்ணகை அம்மன் மெய்யடியார்களே !!!
ஈழமணித்திருநாட்டின் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் எனும் திவ்யபதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் எம்பெருமாட்டி
மகாதிரிபுரசுந்தரி ஸ்ரீகண்ணகை அம்பாளுக்கு நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 14ம் நாள் (29-06-2015) அன்று மாபெரும் பொங்கல் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகூடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
உற்சவகால விபரம்
ஆனி 11ம் நாள் 26-06-2015 கிராமவலமும் முத்தரிசி தண்டலும்…
ஆனி 14ம் நாள் 29-06-2015 பொங்கல் விழாவும் தீமிதித்தலும்
ஆனி 21ம் நாள் 08-07-2015 எட்டாம் மடை திருவிழா
அடியார்கள் உற்சவ காலங்களில் பால், தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை ஆலயத்திற்கு வழங்கி அம்பாளின் அருளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து நன்னியமடைவீர்களாக!
இங்கனம்
பரிபாலனசபை.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்