யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்கள் 25-05-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம்(மணி) ஆகத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
எறிக்(சுவிஸ்), எடின்(இத்தாலி), மாலினி, யூட், நிசாந்தன், அன்ரனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பேக்ஸ்மன்(திருக்குடும்ப கன்னியர் மடம்), சுவக்கீன்பிள்ளை, ஞானம்மா, இராயப்பு, லெற்றிசியா, யோகநாதன்(கனடா), எட்மன்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிறோஜினி, அனுசியா, ரமேஸ், நிறோ, சிந்து, நித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எரிக்சன், டிலக்சன், என்சோ, சாள்ஸ், எரிக்சனா, அஸ்மிரன், எதுசன், றொக்சி, றமிக்சன், யெசிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு 27-05-2015 புதன்கிழமை அன்று சுண்டுக்குளி விதானையார் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:30 மணியளவில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்