மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!
மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 22-05-2015 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
உள்ளூர் மக்களின் ஆதரவுடன்-புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களிப்புடன்-அழகான வேலைப்பாடுகளுடன் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு-சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
அந்நியர்களான,போத்துக்கீசர்,ஒல்லாந்தரால்,அன்று அழிக்கப்படாமல்-வணங்கப்பட்டதாக,எம் முன்னோர்களால் கூறப்பட்டு வரும்-புதுமை மிக்க மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின்(மாதாச்சி ஆலயம் )இன்று அழகாக காட்சியளிப்பது தமக்கு பெருமகிழ்வைத் தருவதாக மண்டைதீவு மக்கள் கூறுகின்றனர்.
கண்ணகி அம்மன் ஆலய புனரமைப்புக்கு முன்னின்று உதவியவரும்-கனடாவிலிருந்து சென்று அம்மனின் கும்பாபிஷேகத் திருவிழாவில் கலந்து கொண்டவரும்-சமூக ஆர்வலருமாகிய-திரு ஜெயசிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
நிழற்படப்பிடிப்பு-திருI.சிவநேசன்-வேலணை
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்