அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
(மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி தர்மகர்த்தா, உயர் சைவ வேளார்குலத்திலகம்)
பிறப்பு : 17 யூன் 1938 — இறப்பு : 21 ஏப்ரல் 2013
யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பா! எங்கள் உயிர்ப்பின் இருப்பு!
நாம் தழைத்துச் செழிக்க
தளராது நின்ற தலைவனாய்
தன் மார்பில் எம்மைத் தாங்கி
தலை நிமிர வைத்த எங்கள் தந்தை
யாருக்குமே கிடைக்காத தந்தை
எங்களுக்கு மட்டுமே கிடைத்த தந்தை..!
எடுத்தடி எடுத்து வைக்கையிலே
உங்கள் ஞாபகங்கள்- மீண்டும்
அடி எடுத்து வைக்க மறுக்குதப்பா..!
தேம்பித் தேம்பி அழுத பின்பும்
தேங்கி நிற்கும் உங்கள் நினைவுகள்
நெஞ்சை நிறைத்து- எங்கள்
கண்களைக் குளமாக்குதப்பா..!
கலையாத கவலைகள்
தாளாத சோகங்கள் – தேறாத உள்ளமாய்
மனம் பருதவிக்கும் பாட்டில்
மாண்டுவிடவே தோன்றுதப்பா..!
ஈராண்டென்ன? ஈராயிரமானாலும்
ஈரவிழிகளோடும் ஈரநெஞ்சோடும்
உங்களின் ஈர்ப்பலைகள்- எங்களை
ஈர்த்துக் கொண்டேயிருக்கும்
குன்றாதருள் புரியும் எங்கள் குலத்தெய்வம் மண்டைதீவு கண்ணகை அம்பாள்
திருவடியில் உங்கள் ஆத்ம சாந்தி வேண்டி இறைஞ்சுகின்றோம்.
உங்கள் நினைவுகள் சுமந்து வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்
ஏகாம்பரம் குடும்பத்தினர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்