தம்பியப்பா பரஞ்சோதி (சோதி)
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்- யோகபுரம், மல்லாவி)

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பியப்பா-வேதநாயகி தம்பதியரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மருதலிங்கம்-சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், குணேஸ் வரியின் (குணம், பிரம்மகுமாரி) அன்புக் கணவரும், யசோதரன் (உள்ளூராட்சி திணைக் களம் வட மாகாணம்), காலஞ்சென்ற ஜமுனா (பிரம்மகுமாரி முன்னாள் ஆசிரியை கொட்டாஞ்சேனை தமிழ் வித்தியாலயம்), மற்றும் பகீதரன் (லண்டன்), சிறீதரன் (கனடா), மிதுனா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற தில்லைநாயகம் மற்றும் சக்தி வேல், தாமோதரம்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்-அருணோதயக் கல்லூரி), காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, தெட்சணாமூர்த்தி (முன்னாள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்) மற்றும் சிதம்பரநாதன் (ஓய்வுநிலை திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர்), காங்கேசபிள்ளை (ஓய்வுபெற்ற அதிபர்-பலாலி ஆசிரியர் கலாசாலை) ஆகியோரின் அருமைச் சகோதரனும், லோஜினி (நிர்வாக அலுவலர், கல்விவலயம், தென்மராட்சி சாவகச்சேரி), மதுமதி (லண்டன்), வளர்மதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, அன்னலட்சுமி, புஸ்பவதி (பவளம்), காலஞ்சென்ற தயாபரன் மற்றும் தியாகேஸ்வரி, ஜோதீஸ்வரி, ஜெயந்தி, நாகேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை-யாழ் இந்து மகளிர் கல்லூரி), காலஞ் சென்றவர்களான படிகலிங்கம், திருநீலகண்டன் ஆகியோரின் மைத்துனரும், அமரர் சண்முகத்தின் (முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்-கச்சேரி, மன்னார்) சகலனும், மிதுன் (அவுஸ்திரேலியா), தனிஷா (லண்டன்), தர்னா (லண்டன்), வருண் (கனடா), கவீன் (கனடா) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05.11.2014 புதன்கிழமை அன்று நீர்கொழும்பு குமாரி மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் யாவும் நடைபெற்று நீர்கொழும்பு பொது மயானத்திற்குத் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
2/20, மொறாச் ஸ்கீம்
கடோற்கல வீதி,
நீர்கொழும்பு.
தகவல் :
குடும்பத்தினர்
தொ.பே : 0773154507
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்