![]() |
மேஷம் உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் ராகுவும் உலவுவதால் முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். புதியவர்களது தொடர்பால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்க்ளும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிக லாபம் தரும்.
7-ல் சூரியன், சனி, சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். விட்டுக் கொடுத்துப் பழகி வருவது நல்லது. கெட்டவர்களின் சகவாசம் அடியோடு கூடாது. நல்லவர்களின் நட்புறவை வலுப்பெடுதிக் கொண்டு அவர்களது சொற்படி நடப்பதன் மூலம் நலம் பெறலாம். சங்கடங்களுக்கு ஆளாகாமலும் தப்பலாம். குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். ராசிநாதன் செவ்வாய் 9-ல் இருப்பதால் தர்ம சிந்தனை வளரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பத்தைக் காணலாம். அரசியல்வாதிகளுக்கும், பொது நலப்பணியாளர்களுக்கும் வரவேற்பு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். அவர்களால் சில இடர்ப்பாடுகளும் உண்டாகும். அறநிலையப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 3-ல் குருவும், 5-ல் ராகுவும், 6-ல் சுக்கிரனும், 8-ல் செவ்வாயும் உலவுவதால் மக்கள் நலனில் கவனம் தேவை. பெண்களால் பிரச்னைகள் சூழும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வாரப்பின்பகுதியில் பயணத்தின்போதும் இயந்திரங்களின் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். மிதுனம் உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் நல்லவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள். அவர்களால் அனுகூலமும் பெறுவீர்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்கள் குறையும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். மாணவர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கொடுக்கல்=வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பண நடமாட்டமுள்ள இனங்களில் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவார்கள். 5-ல் சூரியனும் சனியும் இருப்பதால் பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். 4-ல் ராகுவும் 7-ல் செவ்வாயும் உலவுவதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை. கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும். மக்கள் நலம் சீராகவே இருந்துவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். சுகம் கூடும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். புதன் 3-லும், சூரியனும் சனியும் 4-லும், கேது 9-லும் உலவுவதால் அலைச்சல் அதிகரிக்கும். பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். சிம்மம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் சுக்கிரனும், சனியும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். குரு, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண்வம்பு வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எதிரிகள் இருப்பார்கள். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வாரக் கடைசியில் எதிர்பாராததோர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். கன்னி உங்கள் ஜன்ம ராசியில் புதனும் 2-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றலும் தொழில் நுட்பத்திறமையும் கூடும். மதிப்பு உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணிதம், எழுத்து, வியாபாரம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வாழ்க்கைத்துணைவரால் அளவோடு நலம் உண்டாகும். 2-ல் சனியும் சூரியனும் இருப்பதால் வீண்வம்பு கூடாது. குடும்ப நலனில் கவனம் தேவை. கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். குரு பலம் இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். துலாம் உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள். மன உற்சாகம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். பொருள்வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். இயந்திரப்பணியாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். பிரச்னைகள் எளிதில் தீரும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். ஜன்ம ராசியில் சூரியனும் சனியும், 12-ல் புதன், ராகு ஆகியோரும் உலவுவதால் உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. விருச்சிகம் உங்கள் ராசிக்கு 9-ல் குருவும், 11-ல் புதன், ராகு ஆகியோரும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பண நடமாட்டம் திருப்தி தரும். நல்லவர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். மாணவர்களது நிலை உயரும். ஆராய்ச்சியாளர்களுக்குப் புகழும் பொருளும் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். 2-ல் செவ்வாயும் 5-ல் கேதுவும், 12-ல் சூரியன், சனி ஆகியோரும் இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். தந்தையாலும், வேலையாட்களாலும் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தனுசு உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் ராகுவும், 11-ல் சூரியனும், சுக்கிரனும் சனியும் உலவுவதால் செய்து வரும் தொழில் சீராக நடந்துவரும். புதிய முயற்சிகள் கைகூடும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மதிப்பு உயரும். தந்தையால் நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். ஜன்ம ராசியில் செவ்வாயும், 4-ல் கேதுவும், 8-ல் குருவும் இருப்பதால் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. மகரம் உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும் 9-ல் புதனும் 10-ல் சூரியன், சுக்கிரன் சனி ஆகியோரும் உலவுவதால் காரியானுகூலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பண வரவு அதிகமாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கல் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மாணவர்களது திறமை வெளிப்படும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வாரக்கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். கும்பம் உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும் உலவுவது விசேடமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தர்ம சிந்தனை வளரும். திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். செய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். எதிரிகள் ஏமாந்து போவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் கூட வெற்றி கிடைக்கும், வியாபாரம் பெருகும். எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். மற்றவர்கள் உங்களைப் போற்றுவார்கள். மனத்துல் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைகள் பல ஆற்றுவார்கள். 2-ல் கேதுவும், 6-ல் குருவும், 8-ல் ராகுவும் உலவுவதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் கவனம் தேவை. குடும்ப நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அந்நியர்களிடம் எச்சரிக்கை தேவை. மீனம் உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 8-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பம் சாதாரணமாக இருக்கும் என்றாலும் பின்பகுதியில் விசேடமான நன்மைகள் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். சூரியன், சனி, ராகு, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் உடல்நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கத்துக்கு இடம் தரலாகாது. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். |
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்