மழை பெய்யத் தவறிவிட்டதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் தீவகமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம் தீவக பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதுடன் நீரின் தன்மையும் மாறுபட்டுச் செல்வதாக மேலும் தெரிய வருகின்றது.
மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான் பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளில் குறைவான தண்ணீரே காணப்படுவதாகவும்-வேலணைக்கு அப்பால் அமைந்துள்ள கிணறுகள் சிலவற்றில் அறவே தண்ணீர் இல்லாத நிலை தென்படுவதாகவும் தெரிய வருகின்றது.
இப்பகுதிகளில் தண்ணீர் வற்றிப்போன கிணறுகளை மக்கள் மீண்டும் ஆழப்படுத்தி தண்ணீரைத் தேடுகின்ற பரிதாபமான நிலை காணப்படுகின்ற போதிலும் -இக்கிணற்று நீர் குடிநீராக மாற வாய்ப்பில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி அல்லையூர் இணையம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்