மண்டைதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய
சடலம் .
மண்டைதீவைச் சேர்ந்த சாள்ஸ் யான தீபன் (ராசன் ) என்பவரின் சடலம் இன்று கரை ஒதுங்கி உள்ளது .என அங்கிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றன . மரண அறிவித்தலுடன் மிகுதி விவரங்கள் அறிவிக்கப்படும் .
யாழ்.தீவகம் மண்டைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. வியாழக்கிழமை அன்று மீன்பிடிக்கச் சென்ற மண்டைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையாகிய திரு தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் (வயது41) என்ற மீனவரின் சடலமே கரையொதுங்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மீனவரின் படகு அல்லைப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில்அவரது சடலம் மண்டைதீவு சுடலைவெளி என்ற பகுதியில் கரையொதுங்கியதாக தெரிய வருகின்றது.
மண்டைதீவு பெருங்கடலுக்கு தனியாக படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும் படகின் இயந்திரப் பகுதியில் இருந்த போது ஏற்பட்ட கடும் காற்றினால் கடலில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்திருப்பதாக தாம் சந்தேகிப்பதாக சக மீனவர்கள் தெரிவித்ததாக தெரிய வருகின்றது .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்