மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான வேலைகள் நிறைவுபெற்று, (23.06.2014) திங்கள் கிழமை அன்று நண்பகல் 12.30 மணிக்கு முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திருப்பணி சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதி பங்களிப்புடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன் அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கெள்கின்றோம்.
ஏனைய புலம்பெயர் மக்களிடமிருந்து மற்றைய தளங்களுக்கான திருப்பணி நிதிப் பங்களிப்பினை அன்புரிமையுடன் நாடி நிற்கின்றோம்.
திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்