மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தினர் தங்கூசி வலைகளுக்கு பதிலாக மாற்று வலைகளைத் தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என கூறி ஒரு கோடி பெறுமதியான வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமது தொழிலை நேர்மையாக செயற்படுத்தும் வகையில் தமக்கான நூல் வலையினை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பட்டி,றோலர்,கனவாய்க் குழாய் ஆகியற்றை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் வேறு பிரதேச மக்கள் மற்றும் இந்திய மீனவர்களின் செயற்பாட்டினையும் தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்