இன விரோத சக்திகளும்
உலக வல்லாதிக்கரும்
ஒருங்கே இணைந்து
வெட்ட வெளி நிலத்தை
வேண்டும் என்று அறிவித்து
வேரோடு பட்டி அடைத்து
உண்ண உணவுமின்றி
உமிழ நீருமின்றி
உறக்கமும்மின்றி
தவித்திருந்த வேளை
கொடிய கொத்துக்
குண்டுகளும்
கொடூர நச்சு வாய்வு
குண்டுகளும் கொட்டி
கொத்து கொத்தாய்
எம்மினம் அழிய
எஞ்சியவர்கள்
எல்லோரும்
சிறை பிடிக்கப்பட்டு
இன்றும் சிறையில்
வாடிக்கொண்டு
இருக்கையில்
புனர்வாழ்வு என்று
திறந்தசிறையில்
மக்கள் தினம் தினம்
கை ஒப்பமும்
கஞ்சிக்காய் கொடுக்கும்
பொருள்வாங்க
போதாதவயத்தில்
முதியோர்
கழுத்திலும், கையிலும்
எண்கள் பொறிக்கப்பட்ட
பெயர் பதாதையும் தாங்கி
காத்திருக்கும் காட்சி
நெஞ்சை உருக்குகிறது
காலம் ஐந்தாண்டைக்
கண்டபோதும்
போர்குற்றம்
உறுதிகண்டபோதும்
தொடரும் இன வஞ்சம்
என்று தீருமோ???.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்