அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
(சின்னத்துரை – மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி தர்மகர்த்தா, உயர் சைவ வேளாளர் குலத்திலகம்)
மலர்வு : 17 யூன் 1938 — உதிர்வு : 21 ஏப்ரல் 2013.
யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் சுவாசமாய்
எங்கள் அப்பா!
எங்கள் இதயத்தில் கருவாய் உயிரெடுத்து
எங்கள் சுவாசத்தின் மூச்சாய் உருவெடுத்து
எங்கள் உயிரின் உயிராய்க் கலந்து
எங்களுள் உருவான தெய்வமே – எங்கள் அப்பா
கடும் உழைப்பு, நல்லொழுக்கம் – இதுவே
என் சொத்து என்றாய்….
துடிதுடிப்பு, சிரித்தமுகம் – இதுவே
என் வாடிக்கை என்றாய்….
எட்டுத்திக்கிலும் புகழ்பரப்பி எட்டுப்பிள்ளைகளுடன்
இமயம் வரை சென்றாய்!
ஓராண்டென்ன? எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
கடந்தாலும் உங்கள் ஆத்மாவில் எங்கள் ஆன்மா கலந்திருக்கும்
அடி அடியாய் நாங்கள் வளர
அணு அணுவாய் உழன்று
பாசக்காரத் தலைவனாய் – சூரியனாய்
வலம் வந்தீர்களே – அப்பா
நாம் முற்பிறப்பில் செய்த தவப்பயனாய்
இப்பிறப்பில் எங்களுக்குத் தந்தையானாய் – இனி
எப்பிறப்பில் காண்போம்
குன்றாதருள் புரியும் எங்கள் குலத்தெய்வம் கண்ணகை
அம்மனின் திருவடியில் சமர்ப்பிக்கின்றோம்
உங்கள் நினைவில் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் திதிக்கிரியைகள் 10-05-2014 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் 59B Station Rd Harrow, Greater London HA1 2TY, UK என்ற முகவரியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும். இவ் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— இலங்கை
செல்லிடப்பேசி: +94770714199.
Filed under: Allgemeines |
Thanks Sri anna, today for my dad’s 1st remembrance day, we will put pictures. Can you put pictures too? Thanks for everything you did!