வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக இலக்கம் 130, ராசாவின் தோட்டம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) (ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் பொலிஸ் அலுவலகம்) நேற்று (24.03.2014) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மலாயன்பென்சனியர் சரவணமுத்து நாகேஸ்வரி தம்பதியரின் பாசமிகு மகனும் மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் சொர்ணம்மா தம்பதியரின் மருமகனும் செல்வலக்சுமியின் அன்புக்கணவரும் மனோரஞ்சிதம் (தங்கம்) இன் தந்தையும் காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சாவித்திரிதேவி மற்றும் சுப்பிரமணியம் (ஓ.பெ. கூட்டுறவு பரிசோதகர் கொழும்பு) காலஞ்சென்றவர்களான லக்ஸ்மி அம்மா (ஆச்சி), மகாலிங்கசிவம் (சிவம்) மற்றும் இரட்னேஸ்வரி (ஓ.பெ. ஆசிரியை திருகோணமலை), நல்லநாயகி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் சரஸ்வதி (கொழும்பு ஓ.பெ. ஆசிரியை) காலஞ்சென்றவர்களான நடராஜா (ஓய்வு பெற்ற லிகிதர்), நவமணி (கொழும்பு), Dr. ராமச்சந்திரன் (திருகோணமலை) காலஞ்சென்றவர்களான நடேசானந்தன் கந்தையா (சிறாப்பர் வேலணை), இரத்தினசபாபதி ( முன்னாள் உப தபாலதிபர் ஒ.க அல்லைப்பிட்டி), இராசம்மா (பிரான்ஸ்), புவனேஸ்வரி (பிரான்ஸ்) காலஞ்சென்ற சுயம்புலிங்கம், மங்கையற்கரசி (அல்லைப்பிட்டி), திருநாவுக்கரசு (மண்டைதீவு), ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவயோகலக்சுமி, வேலாயுதபிள்ளை மற்றும் சிவரட்ணம் (பிரான்ஸ்), ஜெயசிறி (கனடா), நடேசபிள்ளை (அல்லைப்பிட்டி), பராசக்தி (மண்டைதீவு) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.03.2014) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 10.00 மணிக்கு கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : செல்வலக்சுமி (மனைவி), செ. நடேசபிள்ளை ( சகலன் அல்லைப்பிட்டி), இராமச்சந்திரன் (மைத்துனர் திருகோண��
தொடர்புகளுக்கு-021 2225921
செல்வலக்சுமி (மனைவி),
செ. நடேசபிள்ளை ( சகலன் அல்லைப்பிட்டி),
இராமச்சந்திரன் (மைத்துனர் திருகோணமலை)
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்