மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த கனகசபை மங்கையக்கரசி அவர்கள் இன்று (23. 03 . 2014) அன்று சிவபதம் அடைந்தார் . என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம் . விபரங்கள் …
மண்டைதீவு 1 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி கனகசபை நேற்று (23.03.2014) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னப்பு கனகசபையின் அன்புமனைவியும் காலஞ்சென்றவர்களான இலங்கையர் அன்னம் தம்பதியரின் மூத்தமகளும் சின்னப்பு சின்னப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் ஜெயலட்சுமி, சண்முகராசா, கனகசபாபதி (ஆஸ்திரேலியா), பரமேஸ்வரன் (புஸ்பரா), சிறிகாந்தலட்சுமி காலஞ்சென்ற மதியழகன் (திலகன்) ஆகியோரின் அன்புத்தாயும் காலஞ்சென்றவர்களான தீபநாயகி, ரஞ்சிதமலர், வேதநாயகம், செல்வநாயகி, தெய்வநாயகி ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் நற்குணராசா ஆகியோரின் அன்புமைத்துனியும் மாணிக்கவாசகர், ஜெயபாலேஸ் காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஜெயம், சுரேஷ், ரமணன், ராகுலன் ஆகியோரின் பெரியதாயும் சுதாகர், தற்சுதன், கஜன், மனோசங்கர், சஞ்சீவன், பார்த்தீபன், மனோ, மதன், விமல் காலஞ்சென்றவர்களான பிரதீபன், தர்சினி ஆகியோரின் பேரத்தியும் கிருத்திகன், சண்ஜெய், அஜய், ஆராதியா, கர்ணிகா, கவினயா, கவிணயன், தாயகன், பிரதீபன், பிரணஜன், பிரியங்கா, பிரியந்தன், சசிகரன், அபியா, அபிஷன், அபிஷாந், கிருஷாந், அபிஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.03.2014) திங்கட்கிழமை பி.ப. 2.00 மணியளவில் தற்காலிகவதிவிடத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மண்டைதீவு தலைக்கீரி மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
|||
தகவல் : குடும்பத்தினர் | |||
|
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்