மண்டைத்தீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை செல்வரெத்தினம் கடந்த 27.01.2014 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை சலமைப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும், றெஜினாவின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற கில்டா, கில்பேட் (லண்டன்), எமில்டா, சிமோல்டா, கிறிஷாந்தன் (பிரான்ஸ்), கியோமார் (இத்தாலி), பதல்டா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சின்ராசா, சுயாந்தா, மெசியா, யூட்தாஸ், சிந்து, எட்ஙமதேவன் ஆகியோரின் பாசமிகு மாமனும், ஐனிஸ், யசோ, அனுசியா, அபித்தா, அஜித்தா, தர்ஷன், தர்சினி, தர்சிபன், யூட்சினி, கவிதாஸ், கிஷானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆனைக்கோட்டை அவரது இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக மண்டைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மண்டைதிவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
மறுமொழியொன்றை இடுங்கள்