யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 16, மடம் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா என்று அழைத்தோமே – அன்போடு இன்று ஐய்யோ என்று அழுகிறோமே உம் ஆறாத பிரிவால் ஓராண்டு ஆனதே ஐயா உம்மை ஒரு நாளும் நினையாது இல்லையே ஐயா
எம் பார்வையில் குழந்தை போல் பாசாங்கு காட்டினீர் இன்று பாதியில் எம்மைவிட்டு போனது ஏன் ஐயா எத்தனையோ எழுத்துக்கள் எழுதியும் வலிக்காத என் கைகள் உம் நினைவு அஞ்சலி எழுதும் போது கையோடு சேர்ந்து நெஞ்சமும் வலிக்கிறது
மண்டைதீவு மண்ணில் பிறந்த மரகதமே, கட்டிடக்கலை நாயகனே அணையா விளக்கைப் போல் எம்மோடு அன்பாய் இருந்தவரே, நீர் அணைந்து ஆண்டு ஒன்று ஆகியும் அணையாது எம்மனங்களில் வாழ்கின்றாய் . உங்கள் ஆத்மா சாந்திக்காய் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் .
சாந்தி..!! சாந்தி..!! சாந்தி..!!!
மண்டைதீவு மக்களுடன்
மண்டைதீவு இணையம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்