யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட குருசாமி கனகசபாபதி அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற குருசாமி அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராமநாதன் விசாலாக்ஷி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரி(ராசம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மங்கையர்க்கரசி(சுதா-கனடா), கலையரசி(கௌரி-இலங்கை), கௌரீசன்(ஜெகன்-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணகை(கனடா), சரோஜாதேவி(இலங்கை), காலஞ்சென்ற நிர்மலா, அருணாசலம்(இலங்கை), திலகவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிமளகாந்தன், செபரத்தினம், மலர்தேவி, சிறிகாந்தன், கனகநாதன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உலகராஜா(பன்னீர்-கனடா), சிறிபாதன்(இலங்கை), சோதிமாலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆரணி, பவதாரணி, ஹரணி, ஹரிஹரன், மாதேசன், ஜெகதேசன், கயதேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று 197, பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்