நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்… இறை தூது கொண்டு நீ வந்தாய், தூசிகள் படிந்த மனித மனங்களை தூய்மைப்படுத்த..!
அகிலத்தில் – முதலாய் அகிம்சை எனும் ஆயுதம் தூக்கிய இளைஞனே அப்பாவியாய் நீ உலகை வலம் வந்தாய். மனித மனங்களை மாண்பால் பண்படுத்த நீ முயன்றாய்..! ஆனால்…படுபாவிகள் உன் தலையில் முட்கிரீடம் இட்டு தோளில் சிலுவை சுமக்க வைத்தார்களே இறுதியில் அதில் உனை அறைந்தே வீரம் கொண்டார்களே
அதர்மத்தின் வீரம் அகோரம். தர்மத்தின் வீரம் சாந்தம்..!
இளைஞர் எம் முன்னோடியே விடுதலைப் போராளியே.. நாமும் வருவோம் உனது தடம்படித்தே..! தோழனே ஜேசுவே உன் பிறந்த நாளில் உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..! வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல சாண்டாவுக்கோ சந்தாவுக்கோ அல்ல… உன் தியாகத்தை மனதில் இருத்திட உன் தடம் பற்றி நின்றிட..!
Filed under: Allgemeines |
நத்தார் நல் வாழ்த்துக்கள் !
உலகெங்கிலும் நத்தார்
பண்டிகையை கொண்டாடும்
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
நத்தார் நல் வாழ்த்துக்கள் கூறும்
அருளீசன்