• திசெம்பர் 2013
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,765 hits
 • சகோதர இணையங்கள்

புது வருட இராசி பலன்கள் 2014/ 01. 01. 2014 முதல் 31 .12. 2014 வரை பகுதி 2…

உணர்வுப்பூர்வமாக யோசித்து அறிவுப்பூர்வமாக செயல்படுபவர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் பிறப்பதால் சட்டென்று வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். அதை செயல்படுத்தவும் துவங்கிவிடுவீர்கள். சாதூர்யமாகப் பேசி பல பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் பெருமை பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். வருட பிறப்பு முதல் ஜூன் 12ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீரென்று செல்வம் சேரும். இதுவரை வராதிருந்த பாக்கிகள் தானாக வந்து சேரும். செல்வச் சேர்க்கை மட்டுமல்லாது செல்வாக்கும் கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய பதவிகள் தேடி வரும். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் மழலை பாக்யம் கிட்டும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம் குறையும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தையாரின் உடல்நிலை மீது அக்கறையோடு இருங்கள். சாதாரண விஷயமாக இருக்குமென்று நினைத்து அலட்சியமாக இருக்காதீர்கள். தந்தையாரோடு வீண் விவாதங்கள் வந்துபோகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால், 3ம் வீட்டில் ராகு இருப்பதால் எதையும் சாதிக்கலாம் என்கிற துணிவு பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவமும் தானாக வரும். இதனால் எந்த முடிவு எடுத்தாலும் அதில் திட்டவட்டமாக இருப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் எளிதாக முடியும்.

அரசியலில் நண்பர்களால் உங்களின் செல்வாக்கு கூடும். சொத்துச் சேர்க்கையும் உண்டு. கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். ஜூன் 21ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பேசிக் கொண்டே இருக்கும்போது கோபப்படாதீர்கள். யாரிடமும் கடுமை காட்டாது பொறுமையாக பதில் சொல்லுங்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும்.

அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண்பழிக்கு ஆளாவீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 3ம் வீட்டிலேயே நிற்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இதுவரை முடங்கியிருந்தவர்கள் சுறுசுறுப்பாவார்கள். புதுத் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் தாராளமாக ஈடுபடலாம். நிறைய பேர் உதவுவதற்கு முன் வருவார்கள். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.

சிலர் அண்டை மாநிலம், வெளிநாட்டிற்குச் சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 4ல் சனி அமர்ந்து அர்த் தாஷ்டமச் சனியாகவும் வருவதால் தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலி என்று சிரமங்கள் இருக்கும். அன்பு, பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால் அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறையும் வந்து செல்லும். அசதி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

வியாபாரிகளே! போட்டிகள் கடுமையாக இருந்தாலும் வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் அனுகூலமாக இருப்பார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை முக்கிய இடத்திற்கு மாற்றுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி, ஹாட்வேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்கள்.

உத்யோகஸ்தர்களே! எதிர்காலம் கருதி நீங்கள் சொல்லும் கருத்துக்களை அலுவலகத்திலுள்ளோர் ஏற்றுக் கொள்வார்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உங்களை கண்டு பிரமிக்கவும் செய்வார்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும்.

கன்னிப்பெண்களே! காதல் இனிக்கும். கல்யாணம் கூடி வரும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும்.

மாணவர்களே! படிப்பில் முன்பை விட நல்ல முன்னேற்றம் உண்டு. கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். சக தோழர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

அரசியல்வாதிகளே! வெத்துப் பேச்சை தவிர்த்துவிட்டு தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறை கேட்பீர்கள். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். கட்சியில் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இந்த 2014ம் ஆண்டு கனவு நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல் நிம்மதியையும் அளிக்கும் விதமாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் -திருவாரூர் பாதையில் நன்னிலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு சென்று எமதர்மராஜரையும், சித்திரகுப்தரையும் தரிசித்து வாருங்கள். இத்தலத்திலுள்ள குப்த கங்கையில் நீராடுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

நல்லதோ அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டும் வல்லவர்களே! உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை தள்ளிப் போயிருந்த காரியங்கள் யாவும் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பழைய வழக்கு ஒன்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

அம்மான், அத்தை வகையில் மதிப்பு கூடும். என்றாலும் வருடப் பிறப்பின் போது செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் குடும்பத்தினரோடு வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். அதனால் பூர்வீகச் சொத்துப் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சொத்துக்களை வாங்கும்போது தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். வேகமாக வாகனங்களை இயக்காதீர்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குழந்தைகளினால் பெருமை பெறுவீர்கள்.

2.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் பணியிடத்தில் வேலை நெருக்கடியால் அவதிப்படுவீர்கள். மறைமுக எதிரிகளால் அவமானம் வந்து நீங்கும். அதனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு பெருகும். பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சவாலான வேலைகளையும் சர்வசாதாரணமாக முடிப்பீர்கள்.

உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புதுச் சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். குழந்தை இல்லையே என கோயில் கோயிலாக சுற்றியதற்கு இறைவன் குழந்தை பாக்யத்தை அளிப்பார். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும்.

பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை ஆரோக்யமாக இருக்கும். வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் அலட்சிய குணம் மேலோங்கியிருக்கும். எதிலுமே ஆர்வமற்ற தன்மையும், பிறர்மீது அவநம்பிக்கையுடனும் இருப்பீர்கள். சேமிப்புகளெல்லாம் வீண் செலவாகும். விளையாட்டாகப் பேசப்போய் அது வினையில் முடியும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எந்தக் காரியம் செய்தாலும் படபடப்புடன் செய்வீர்கள். அதனால் பொறுமையோடு இருப்பது நல்லது. ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு போன்றவை வந்துநீங்கும். வாயுத் தொந்தரவு இருப்பதால் கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். கணவன்- மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். வருடத்தின் இறுதியில் 17.12.2014 வரை சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனியாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வந்துபோகும்.

கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. திடீரென்று பணப் பற்றாகுறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 3ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களை ஏளனமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உங்களின் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள்.

வியாபாரிகளே! யாருக்கும் பெரியளவில் கடன் தர வேண்டாம். பற்று வரவு கணிசமாக உயரும். நவீன யுக்திகளை கையாண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் உங்கள் பேச்சை கேட்பார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவார்கள். கொஞ்சம் பெரிய நிறுவனத்தை வைத்து நடத்துபவர்கள் அயல்நாட்டு ஒப்பந்தங்களை கிடைக்கப் பெறுவார்கள். ஆனால், புதியதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெஸீட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை வேலைச்சுமை வாட்டும். உத்யோகத்தில் உங்களின் திறமையை சோதிப்பார்கள். வளைந்து கொடு த்துப் போவது நல்லது. 13ந் தேதி முதல் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய சக ஊழியர் வேறு துறைக்கு மாற்றப்படுவார். மற்ற அலுவலகப் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பதவி உயர்வுக்கான தேர்வை எழுதி வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! காதல் குழப்பங்கள் நீங்கும். உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கல்யாணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

மாணவர்களே! சிலர் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியது வரும். வகுப்பறையில் முன்வரிசையில் அமருங்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல்களாகத் தருவது நல்லது. கட்சித் தொண்டர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கலைத்துறையினரே! புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். இந்த 2014ம் ஆண்டின் முற்பகுதி பயத்தை தந்தாலும், பிற்பகுதி அனுசரித்துப் போவதன் மூலம் சாதிக்கவும் வைக்கும்.

பரிகாரம்: நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிக் கோயிலில் அருளும் நீலமேகப் பெருமாளையும், லட்சுமி வராகரையும், செங்கமலவல்லித் தாயாரையும் தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்து சேரணும் என்ற பழமொழியை அறிந்து செயல்படுபவர்களே! உங்களின் பாக்யாதி பதியான புதன் சாதகமான நட்சத்திரத்தில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதூர்யமாக செயல்பட்டு கடுமையான தருணங்களை வெற்றி கொள்வீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டியிருந்ததே அந்த நிலையெல்லாம் மாறும்.

வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவலாகி வரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தையார் வழிச் சொந்தங்கள் உதவி செய்வார்கள். புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எங்கு என்ன பேசவேண்டுமோ அதை சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்பற்றாக்குறை தீரும். இளைய சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நீடிப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தந்தையாருடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். எதிரிகள் நண்பர்கள£வார்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சொந்த ஊர் கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 10ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகளை சும்மா கிளறிக் கொண்டிருக்காதீர்கள். சிக்கல்கள் அதிகமாகும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்தைப் போட வேண்டாம். இதனால் சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வீர்கள். ஜூன் 20ந் தேதி வரை ராசிக்கு 7ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் ஆரோக்யம் பாதிக்கும். மூச்சுத் திணறல், அல்சர், இரத்த சோகை வந்து நீங்கும்.

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதுதான் இந்த நேரத்தில் நல்லது. பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் கட்டி வந்து நீங்கும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் தொடர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். ஷேர் லாபம் தரும். இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 2ல் அமர்ந்து பாதச் சனியாகவும் வருவதால் வீண் வம்பு சண்டைகளுக்கு போகக் கூடாது. உங்களைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் அதிகமாவார்கள். எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள்.

சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். போதை வஸ்துக்களை தவிர்த்து விடுங்கள். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். முக்கிய காரியங்களுக்காக இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

வியாபாரிகளே! வருடத்தின் தொடக்கத்தில் லாபம் அதிகரிப்பதால் அளவுக்கு அதிகமாக முதலீட்டை தவிர்த்து விடுங்கள். அளவுக்கு மீறியும் கடன் தர வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களோடு கருத்து மோதல்கள் வேண்டாம். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மளிகை பொருட்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களால் லாபம் பெருகும். பங்குதாரர்களுடன் அவ்வப்போது உரசல்கள் வந்து நீங்கும். கொடுக்கல்வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகளை கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்துகொண்டு செயல்படப் பாருங்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் பெரிய அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களை மதிப்பார்கள். உங்களின் வேலை மீது மரியாதை கூடும். ஆனால், ஜூன் 13ந் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக்கும். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வேலையைச் செய்வது நல்லதாகும். புலம்பத் தொடங்கினால் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். பதவி உயர்வு, சம்பள பாக்கி தானாகக் கிடைக்கும்.

அவ்வப்போது சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். இடமாற்றம் உண்டு.

கன்னிப்பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ற நல்ல மணமகன் அமைவார். நண்பர்களுடன் யதார்த்தமாகப் பேசி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். மாணவர்களே! அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். எப்போதும் அரட்டைப் பேச்சு வேண்டாமே! விளையாடும் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகாக்களுடன் உரிமையோடு பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும்.

கலைத்துறையினரே! விமர்சனங்களால் பாதிக்கப்படாதீர்கள். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்து புதிய வாய்ப்புகளை கொடுக்கும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். இந்த 2014ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பக்கம் அலைக்கழிப்புகள் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் தலத்தில் அருள்பாலிக்கும் ஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீ ராமானுஜரையும் தரிசித்து வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

ஆரவாரத்துடன் அடுக்கும் மொழியாகப் பேசாமல் நறுக்கென்று நாலு வார்த்தை சொல்பவர்களே! உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செல்வச் சேர்க்கை உண்டு. வீட்டில் வெகுநாட்களாக தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இனி தொடர்ந்து நடைபெறும். முகவாட்டத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகமாக வளம் வருவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் கடந்த காலக் கனவுகளெல்லாம் நனவுகளாகும்.

இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டேயிருப்பீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் கூடி வரும். உங்களின் தனித்திறமை வெளிப்படும். இதுவரை உங்கள் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சித்தவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவன வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 1.9.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமடைவதால் ஆரோக்ய குறைவு ஏற்படும். இரவு நேரப் பிரயாணங்களின்போது சுயமாக வெகுதூரம் வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்துப் பிரச்னைகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 2.9.2014 முதல் செவ்வாய் வலுவடைவதால் உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைச்சல்கள் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். பாகப் பிரிவினையில் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சிலர் புது வழக்கறிஞரை தேடிச் செல்வீர்கள்.

இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சமூக எதிர் நடவடிக்கைகள் உள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டிய சூழ்நிலை வரும். அசிடிட்டி தொந்தரவுகள் வந்து நீங்கும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 9ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான கருத்து மோதல்கள் விலகும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களைச் சுற்றியுள்ள நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்பதை உணருவீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 5ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிலசமயம் தாமதமாகத்தான் முடியும்.

கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆனால் ராகு 11ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 12ல் மறைந்து விரயச் சனியாகவும் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாகவும் வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்து கொண்டேதான் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். வாயு பதார்த்தங்கள், கார உணவுகளை தவிர்க்கப் பாருங்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும். நிறைய காய், கனிகளை உட்கொள்வது நல்லது.

வியாபாரிகளே! ஜூன் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். பக்கத்து கடைக்காரருடன் தகராறு, சரக்குகள் தேங்கியதால் நஷ்டம் என தொடர் சிக்கல்களை சந்தித்தீர்களே! அந்த நிலையெல்லாம் இப்போது மாறும். அரசியல்வாதிகளின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளையும் விற்றுத்தீர்ப்பீர்கள். அதிரடி சலுகை திட்டங்கள் மூலமாகவும் வருவாய் கூடும். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். பகைத்துக் கொள்ளாதீர்கள். வேற்றுமாநிலத்தை சார்ந்த வேலையாட்களால் நிம்மதி கிடைக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி -இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை கடுமையாக உழைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லையே என்று வருந்துவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் அலுவலகத்தில் உங்கள் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி சில சலுகைகளை அவர்களுக்கு பெற்றுத் தருவீர்கள். இடமாற்றம் நிச்சயம் உண்டு. அரசுத் துறையில் வேலை பார்ப்போர் பதவி உயர்விற்காக சில தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவார்கள்.

கன்னிப் பெண்களே! விரக்தி, சோம்பல் விலகும். மிகவும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். அறிவுக் கூர்மை வெளிப்படும். உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நீங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வரனும் அமையும். திருமணம் கோலாகலமாக நடக்கும். காதல் விவகாரத்தை சற்று தள்ளிப் போடுவது நல்லது.

மாணவர்களே! கலைப் போட்டிகளில் காட்டும் அக்கறையை கல்வியிலும் காட்டுங்கள். கணக்கு, அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களில் அக்கறை காட்டிப் படியுங்கள். வகுப்பாசிரியர் அவ்வப்போது உற்சாகப்படுத்தும்படியாக பாராட்டுவார்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கவனம் உங்கள் மீது விழும். பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தொகுதி மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள்.

கலைத்துறையினரே! உங்களிடமிருந்து அற்புதமான படைப்புகள் வெளிவரும். மூத்த கலைஞர்கள் கூப்பிட்டு பாராட்டுவார்கள். இந்த 2014ம் ஆண்டு மனதில் சந்தோஷத்தையும் வசதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: காரைக்குடிக்கு அருகேயுள்ள குன்றக்குடி முருகனை சஷ்டி திதியன்று சென்று தரிசித்து விட்டு வாருங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானமோ அல்லது இயன்ற மருத்துவ உதவிகளையோ செய்யுங்கள்.

மறப்போம் மன்னிப்போம் என்கிற கொள்கையை உடையவர்களே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் நிற்பதால் தடைபட்டிருந்த வேலைகளெல்லாம் மடமடவென்று முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். தள்ளிப்போன திருமணம் தடபுடலாக நடக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமுண்டு. கௌரவப் பதவிகள் தேடிவரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உதவியுண்டு. பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.

வருடப் பிறப்பின் போது செவ்வாய் 10ம் வீட்டில் நிற்பதால் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை கிடைக்கும். அதிலும் நீங்கள் விரும்பிய அயல்நாட்டு நிறுவனத்திலிருந்தே அழைப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்குவதில் மும்முரமாக இருப்பீர்கள். அநாவசியமாகப் பேசி நண்பர்களை இழந்தீர்களே இனி, நிதானமாகப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெகுநாட்களாக தடைபட்டிருந்த சகோதரியின் திருமணத்தை சீரும் சிறப்புமாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்திலுள்ள வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

12.6.2014 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் இதுவரையிலும் உங்களுக்குள் இருந்த திறமைகள் தாமாக வெளிப்படும். அழகோடு கம்பீரமும் கூடியிருக்கும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவார்கள். ஆனால், நீங்கள் எதையுமே பொருட்படுத்த வேண்டாம்.

எத்தனைதான் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தாலும் அத்தியாவசிய மற்றும் அநாவசியச் செலவுகளும் வந்து கொண்டுதான் இருக்கும். அலுவலக ஆவணங்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். தாயாரோடு வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். உங்களின் திறமை மீது உங்களுக்கே அவ்வப்போது சந்தேகம் வரும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மன அழுத்தம் உண்டாகும். ஊர் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனை அவ்வப்போது நிறைவேற்றுவீர்கள். மகள் உங்களை புரிந்து கொள்வார். மகனின் அலட்சிய குணமும் மாறும். தந்தையாரோடு இருந்த மனவருத்தம் நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளால் சில பிரச்னைகள் வந்துபோகும். சுற்றிய நண்பர்களை கொஞ்சம் கண்காணித்து வையுங்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம்.

பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் வீட்டிலும் அமர்வதால் சிலருடைய நிழல் வாழ்க்கையும் தெரிய வரும். எதிர்காலம் என்னாகுமோ என்கிற கவலை அடி மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் பிடிக்கிறதா என்று பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது. இந்தாண்டு முழுக்க சனி 11ம் வீட்டான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீடு வாங்குவீர்கள். சிறிய அளவிலான முதலீடாக இருந்தாலும் புதிய தொழிலைத் தொடங்குவீர்கள்.

சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 12ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரையச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப்பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். சொத்து மற்றும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

வியாபாரிகளே! வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்வீர்கள். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கிவிட்டு தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது ஏஜென்சியும் எடுப்பீர்கள். அயல்நாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை அலுவலகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். ஆனால், 13ந் தேதி முதல் பணிச்சுமை கூடும். மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் இதுதான் சமயமென்று மறைமுகமாக உங்களைப்பற்றி புகார் கூறுவார்கள். எனவே, அமைதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து விடுங்கள். இதனால் பதவி உயர்வும் தள்ளிப் போகும். ஆனால், வருடத்தில் இறுதியில் உங்களின் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வுப் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறும்.

கன்னிப் பெண்களே! நல்ல கணவர் வந்தமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்திலும் வேலை கிடைக்கக் கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள்.

மாணவர்களே! படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். வகுப்பறையில் சக மாணவர்களின் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உயர் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி நடத்தும் அனைத்து பொதுக்கூட்டம், போராட்டங்களில் கலந்து கொள்வீர்கள். கட்சியின் தலைமையிடம் உங்களைப் பற்றி நல்லவிதமான அபிப்ராயத்தை சொல்வார்கள்.

கலைத்துறையினரே! மாறுபட்ட சிந்தனை பிறக்கும். உங்களின் புது முயற்சிகள் வெற்றிபெறும். இந்தப் புத்தாண்டு கடந்த ஆண்டை விட சமூகத்தில் அந்தஸ்தையும் வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்: திருச்சி -கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள திருச்செந்துறை எனும் தலத்திலுள்ள மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர சுவாமியை தரிசித்து விட்டு வாருங்கள். வயதான முதியோர்களுக்கு கம்பளி, செருப்பு போன்றவற்றோடு அவ்வப் போது முடிந்தவரை உதவி செய்யுங்கள்.

கிழக்கும் மேற்கும் அலைந்தாலும் கிடைப்பதுதான் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்தவர்களே! உங்கள் ராசிக்குள்ளேயே பிரபல யோகாதிபதியான சுக்கிரன் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வசதி வாய்ப்புகளில் பலபடி உயரும். தோற்றப் பொலிவு கூடும். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! அந்த நிலையெல்லம் மாறும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் பிறப்பதால் பழைய கனவுகளெல்லாம் நிறைவேறும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பட்டுப்போன மரம் துளிர்ப்பதுபோல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் அலுவலகச் சூழலே கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கும். பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் அவ்வப்போது மேலதிகாரியிடம் புலம்பவும் செய்வீர்கள்.

இதனால் அலுவலக வேலையில் சுணக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 7ம் வீட் டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில் நிறைய வாய்ப்புகள் வரும். உங்களை அறியாமல் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் நடக்க இருந்த சுபநிகழ்ச்சிகள் இனி விமரிசையோடு நடக்கும்.

கணவன் -மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் மழலை பாக்கியம் கிட்டும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்யம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சுற்றியுள்ளவர்களின் சுயரூபத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் சிலர் உங்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் உத்யோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்று பயப்பட வேண்டாம். ஆனால், இரவில் தனியே சுயமாக வாகனம் ஓட்டும்போது மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லது தனியாக நெடுந்தூரம் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள். மேலும், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படு த்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாய மடைவீர்கள். ஆனால் ராகு 9ம் வீட்டில் நிற்பதால் அநாவசியச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பூர்வீகச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழிப் பேசுவர்கள், வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவாலான பணிகளை சர்வ சாதாரணமாக செய்வீர்கள்.

ஆனாலும், அலுவலகத்தில் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்குமாக உங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கான முயற்சியில் வெற்றி பெற்று நல்ல இடத்தில் வேலையில் அமருவீர்கள். பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.

வியாபாரிகளே! ஜூன் மாதம் முதல் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்கள் போன்றவற்றிலிருந்து மீள்வீர்கள். தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர நவீன யுக்திகளை கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களோடு வெளிப்படையாக இருப்பது நல்லது. கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களே! நீங்கள் இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள். நிர்வாகத் திறனும் அதிகரிக்கும். அலுவலகச் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பார். உங்களைப் பாராட்டும்படி நிலைமை சீராகும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும் 10ல் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். ஜூன் மாதம் முதல் பதவி உயர்வோடு சம்பள உயர்வும் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலை கிடைக்கும். நல்ல இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே வரன் அமையும். கல்யாணம் விமரிசையாக நடக்கும். காதல் குழப்பங்கள் நீங்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவர்களே! வகுப்பாசிரியர் உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விளையாடும்போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார். மக்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி சில கருத்துக்களை வெளியிடுவீர்கள்.

கலைத்துறையினரே! உயிரோட்டமான படைப்புகளைத் தருவீர்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். இந்தப் புத்தாண்டு பதுங்கியிருந்த உங்களை பளிச்சென முன்னேற வைக்கும்.

பரிகாரம்: கும்பகோணம் – திருவாரூர் சாலையிலுள்ள சிவபுரம் தலத்தில் அருளும் சிவகுருநாத சுவாமியையும், சிங்காரவல்லியையும் தரிசித்து வாருங்கள். அவ்வப்போது அன்னதானமும் செய்யுங்கள்.

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் என்பதை உணர்ந்த வர்களே! உங்களுக்கு லாப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். கடினமான வேலைகளை கூட பரபரவென முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணப் புழக்கம் பரவலாக இருக்கும். காற்றோட்டமும் நல்ல குடிநீர் வசதியும் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். எப்போதும் சண்டை சச்சரவாக இருந்த வீடு இனி அமைதியாகும். டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள்.

இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் பிரச்னைகளை எளிதாக சமாளிப்பீர்கள். அரசாங்க விஷயங்களை எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வருடம் பிறக்கும் போது ராசிக்கு 8ல் செவ்வாய் மறைந்திருப்பதால் வாகனத்தில் செல்லும்போது மெதுவாகச் செல்லவும். சிறுசிறு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இரவு நேரங்களில் நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளும்போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். இல்லையெனில் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் சான்றோர்களின் நட்பு கிடைக்கும். பிரச்னைகளெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல மறையும். வெகுநாட்கள் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை இல்லையே தவித்தோருக்கு மழலை பாக்யம் கிட்டும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 6ம் வீட்டிலேயே மறைவதால் காரியத் தடைகள் வந்து கொண்டே இருக்கும். பல முயற்சிகளுக்குப் பிறகுதான் காரியங்களை முடிக்க வேண்டியது இருக்கும். அதனால் இந்த காலகட்டத்தில் பொறுமையை இழக்காமல் அமைதியாக இருங்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கக் கூடும். கணவன்- மனைவிக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் பழகுவது நல்லது.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் கேது நிற்பதால் கொஞ்சம் நிம்மதி அடைவீர்கள். திட்டமிட்டபடி காரியங்கள் தானாக நடக்கத் தொடங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு சேமித்தாலும் வீண் செலவுகளுக்காகவே பணம் விரயமாகும். பணப் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவரோடு வாக்கு வாதங்களும் வந்துசெல்லும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வரும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும், ராகு 8ம் வீட்டிலும் அமர்வதால் பதட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாகப் பேசப்போய் மாபெரும் சண்டையில் முடிந்து விடும் வாய்ப்பு இருப்பதால் வீணான வாக்குவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கண், பல் வலி, காது வலி வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களை யெல்லாம் அவ்வப்போது நினைவுக்கூர்ந்து பேசாதீர்கள். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் வெற்றியை நோக்கியே மனம் சென்று கொண்டிருக்கும்.

எத்தனை பிரச்னைகள் வந்தாலும் உள்ளுக்குள் எதையும் ஜெயித்து விடலாம் என்கிற உறுதி இருக்கும். அத்தியாவசியமான செலவுகள் குறைக்க முடியாது. சொத்து வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 10ல் அமர்வதால் என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்று யோசிப்பீர்கள். வெறும் பேச்சு எதற்கும் உதவாது என்று முடிவெடுப்பீர்கள். காரியத்தில் கண் வைப்பீர்கள். இதனால் புது பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

வியாபாரிகளே! லாபம் சுமாராக இருக்கும். அதனால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செல்ல வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் எதையும் செய்யாதீர்கள். வேலையாட்களையும் விரட்டாதீர்கள். தொழில் ரகசியங்களையும் சொல்ல வேண்டாம். சந்தை நிலவர த்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். வேலையாட்களால் சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்கள் கைக்கு வரும்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை அலுவலகப் பணிகளை வேகமாக மடமடவென்று முடிப்பீர்கள். 13ந் தேதி முதல் உங்களையும் அறியாமல் வேலை குறித்த அச்சம் வரும். சக ஊழியர்களைப் பற்றிக் குறை கூற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

கன்னிப்பெண்களே! உங்களின் எதிர்பார்ப்புப்படி நல்ல வேலையிலுள்ள வரன் வரும். திருமணமும் நல்லபடியாக முடியும். பெற்றோரை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

மாணவர்களே! விடைகளை ஒருமுறைக்கு நான்கு முறை எழுதிப் பாருங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமைக்கு தெரியப்படுத்துவது நல்லது. எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.

கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். இந்தப் புத்தாண்டு ஒரு பயத்தையும் கேள்விக் குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலம் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: திருப்பத்தூர் – காரைக்குடி பாதையில் 8 கி.மீ. தொலைவிலுள்ள வைரவன்பட்டியில் அருளும் பைரவரை தரிசித்து வாருங்கள். சிவாலய உழவாரத் திருப்பணியை அவ்வப்போது மேற்கொள்ளுங்கள்.

எறும்பைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களே! உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பழைய கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். புதிய அனுபவங்களை சுமந்து கொண்டு இனி பயணிப்பீர்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பெரிய நிறுவனம் உங்களை நல்ல சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்கும்போது பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். அரசாங்க விஷயங்கள் எளிதாக முடியும். வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் நிற்பதால் அலுவலகச் சூழல் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருக்கும். எப்போதும் பதட்ட த்துடன் காணப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் கொஞ்சம் பாதித்து பின்னர் சரியாகும். தாயாருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 5ம் வீட்டிலேயே அமர்வதால் மனதில் நிம்மதி பிறக்கும். இதுவரை வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதியதாக வீட்டு மனை வாங்குவீர்கள். வருமானத்தை உயர்த்த பல்வேறு விதங்களில் யோசிப்பீர்கள். வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்யம் கிட்டும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பார்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் கேதுவும், 8ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் மறைமுக எதிரிகள் ஏமாற்றுவதற்கு முயற்சிப்பார்கள். அதனால் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். மேலும் வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். சிறு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதிகம் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்து நீங்கும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செ ன்று நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. என்றாலும் தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்- மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். இந்தாண்டு முழுக்க சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் உணர்ச்சிவசப்பட்டு பேசி வார்த்தைகளை இறைக்காதீர்கள். கொடுத்து ஏமார்ந்து போன பணத்தை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளி ஊருக்குச் செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து விட்டுச் செல்லுங்கள். தாழ்வுமனப் பான்மை தலைத்தூக்கும். கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 9ம் வீட்டில் அமர்வதால் தெளிவாக எல்லா முடிவுகளையும் எடுப்பீர்கள். மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.

வியாபாரிகளே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் கடன் வாங்கி பெரிய முதலீடுகள் செய்து வியாபாரம் தொடங்க வேண்டாம். ஜூன் மாதம் முதல் போட்டிகளில் வியாபாரத்தை எத்தனை போட்டிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். எனவே, வேலையாட்களிடம் ரொம்பவும் கண்டிப்பு காட்டாதீர்கள். ஏற்றுமதி -இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள் வகைகளால் லாபம் பெ ருகும். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவார்கள். கடையை மாற்றியமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். சிலர் தனியாகப் பிரிந்து சென்று புதுத் தொழில் தொடங்குவீர்கள். வாகன உதிரி பாகங்களிலும் நல்ல லாபம் கிட்டும்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் உங்களின் திறமைகளை புரிந்து கொண்டு ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். திறமையிருந்தும் கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே இருந்தீர்களே அந்த நிலையெல்லாம் மாறும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பளம் உயரும். சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். இழந்த சலுகைகளை மீட்பீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் பலருக்கு உயர்கல்விதான் முக்கியம் என்று தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள். மே மாதம் வரையிலும் குழப்பங்கள் இருந்து பிறகு சரியாகும். அதற்குப் பிறகு அலைச்சல், டென்ஷன் போன்றவை நீங்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துச் செல்லும். தாயார் பேச்சுக்கு கோபப்படக் கூடாது. திருமணமும் கூடி வரும்.

மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்கள், மறைமுக எதிரிகள் இவர்களிடமிருந்து விடுபட்டு தலைமைக்கு நெருக்கமாவீர்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரே! நல்ல படைப்பு உங்களிடமிருந்து வெளிவரும். பெரும் பாராட்டுகள் கிடைக்கும். மூத்த கலைஞர்கள் தாங்களாக வந்து பாராட்டுவார்கள். வாடிப் போயிருந்த உங்களை இந்தப் புத்தாண்டு வளம் பெற வைக்கும்.

பரிகாரம்: நாகப்பட்டினம் தலத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளையும், ஸ்ரீராமரையும் தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியரை மறக்காது சென்று பார்த்து விசாரித்து இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: