• திசெம்பர் 2013
    தி செ பு விய வெ ஞா
    « நவ்   ஜன »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,132,794 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

புது வருட இராசிபலன்கள் 2014/. 01.01 2014 முதல் 31.12. 2014 வரை

மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே!

நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இதுவரை கல்வியில் பின் தங்கியிருந்த பிள்ளைகள் இனி நன்றாகப் படிப்பார்கள். உங்கள் மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி அதிவேகமாக முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கரைந்து கொண்டிருக்கிறதே என்கிற வருத்தம் நீங்கும் அளவுக்கு இனி சம்பாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைத்து அதன் மூலம் சில முன்னேற்றங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்திற்குள் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் யாவும் விலகும்.

உங்களின் பரம்பரைச் சொத்து நியாயமான முறையில் உங்களுக்கு வந்து சேரும். மேலும், தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வருடப் பிறப்பின் போது உங்கள் ராசிநாதனான செவ்வாய் 6ம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மன உளைச்சல்கள் முற்றிலும் நீங்கும். நீங்கள் பேசும் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உங்களின் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்களையெல்லாம் பைசல் செய்வீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு பிறகு காலதாமதாக தள்ளிப்போய் முடியும். கடுமையான பணிச்சுமை இருக்கும். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 4ம் வீட்டிலேயே அமர்வதால் எப்படியாவது இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 14.10.2014 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாய் பலவீனமாவதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் மனக்கசப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்து நீங்கும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற மனோ பயத்திலிருந்து வெளியே வருவீர்கள். எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 7ல் நின்று கண்டகச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகளும் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். மறதியால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும்.

யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அநாவசியமாக மற்றவர்களின் விவகாரத்தில் தலையிட்டு நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சை கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கை யாளர்களும் தேடி வருவார்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. துணி, சிமென்ட், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகஸ்தர்களே! கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் வெற்றியை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் உழைப்பை பயன்படுத்தி சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சம்பள உயர்விற்காக போராட வேண்டி வரும்.

கன்னிப்பெண்களே! தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்களின் நட்பால் உற்சாகம் உண்டு. காதல் எண்ணத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். மாணவர்களே! கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கவனத்தைப் பெறுவீர்கள். தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற சாதாரண வாய்ப்பையும் வீணாக்காது தக்க வைத்துக் கொள்ளுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். இந்த 2014ம் ஆண்டு போராட்டமாக இருந்தாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள ஆனந்ததாண்டவபுரம் தலத்தில் அருளும் பஞ்சவடீஸ்வரரையும், கல்யாண சுந்தரி, பெரியநாயகியையும் தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

மதியாதார் முற்றம் மிதிக்காமல் மனதில் பட்டதை பளிச் சென்று பேசுபவர்களே! உண் மையை உயிர்க் காற்றாய் சுவாசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சோம்பல் விலகும். புத்துணர்ச்சியும் துணிச்சலும் பெருகும். சாதாரணமாக இருந்த நீங்கள் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைத்து நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஆனால், எட்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். பயப்படாதீர்கள். பொதுவாகவே மிகவும் விலை மதிப்பு வாய்ந்த பொருட்களை வைத்துக் கொண்டு இரவுப் பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சீக்கிரமாக முடியும். இந்தாண்டு முழுக்க சனி 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிரிகள் அடங்குவார்கள். சிலபேர் நண்பர்கள் ஆவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். அதற்கான வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்துச் சேர்க்கையும் உண்டு. தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும்.

வெகுநாட்களாக அவருக்கு இருந்த நோய் விலகும். நீங்கள் காத்திருந்த அயல்நாடு செல்ல வேண்டிய விசா கிடைக்கும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து நீங்கும். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட் டிலேயே அமர்வதால் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். தொடர்ச்சியான வேலைகளால் டென்ஷன் அதிகரிக்கும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்று குழம்புவீர்கள். இளைய சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு சென்று வருவீர்கள். அதுமட்டுமின்றி சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்துவீர்கள். இந்த காலகட்டங்களில் பொதுவாகவே தூக்கக் குறைபாடு இருக்கும். ராகுவும் ஜூன் 20ந் தேதி வரை 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.

சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் உங்களின் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டியது வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள்.

வியாபாரிகளே! நஷ்டங்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து வைத்திருப்பீர்கள். நூதனமான முறையில் வியாபாரத்தை பெருக்குவீர்கள். அதற்கேற்ப முதலீடுகள் செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பெயர் பலகையை நவீனமாக அமைப்பீர்கள். உங்களின் முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். வேற்று மொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. அனுபவமிக்க வேலையாட்களை அமர்த்துவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆனாலும், வெளிப்படையாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது நல்லது.

உத்யோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். இதுவரை பாரபட்சமாக நடந்து கொண்ட மேலதிகாரி இனி சரியானபடி நடந்து கொள்வார். பொறுப்புகள் கூடும் நேரம் இது. அதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவார்கள். அனைத்து அலுவலக கூட்டங்களிலும் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஆனாலும், பணிகளை முடிப்பதில் தொய்வு வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள். இந்த வருடத்து இறுதிக்குள் பதவி உயர்விற்காக உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சம்பளத்தோடு சலுகைகளும் சேர்ந்து கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! சாதுர்யமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் கவனத்தோடு இருப்பீர்கள். காதல் இனிக்கும். ஆனாலும், பெற்றோரின் சொல்படி கேட்பீர்கள். உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ள£தீர்கள்.

மாணவர்களே! புத்தக அறிவை விட பொது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுவீர்கள். கல்லூரியில் படிக்கும்போதே கனவு கண்ட நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். மேலும், உயர் கல்வி பயில ஆசைப்படும் மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்திலிருந்து உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அமையும். நல்லவர்கள் என்று நம்பிய சில நண்பர்களின் சுயரூபத்தை இப்பொழுது புரிந்து கொள்வீர்கள். நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சக போட்டிக் கட்சியினரைக் கூட அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் பெறுவீர்கள். அவர்களின் தந்திரமான காய் நகர்த்துதலை புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்புகள் நீங்கும். அதனால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

கலைத்துறையினரே! இத்தனை நாள் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களோடு நீங்கள் கொண்டிருந்த நல்ல நட்புறவால் சாதிப்பீர்கள். இந்த 2014ம் ஆண்டு உங்களின் விவேகத்தை அதிகப்படுத்தி செயலில் விரைவைக் கூட்டி வெற்றிக் கனியை தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை – பொன்னேரிக்கு அருகேயுள்ள சின்னக்காவணம் தலத்தில் அருளும் நூற்றெட்டீஸ்வரரையும் நடராசரையும் அத்தலத்திலுள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீட்டையும் தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தை பிடிப் பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் ஒட்டுமொத்த திறமை களையும் வெளிப்படுத்த வெறியோடு உழைப்பீர்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுவதால் பல நண்பர்களை இழந்திருப்பீர்கள். ஆனால், இப்போது அனைவரும் உங்களை புரிந்து கொண்டு வருவார்கள். உங்களின் சொந்த உழைப்பினால் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். சில இடங்களில் வளைந்து கொடுத்தும் சில நேரங்களில் மௌனமாக இருந்தும் சாதித்துக் காட்டுவீர்கள்.

அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களின் ராசிநாதனான புதன் 7ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் நிறைய புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கிப் போடுவீர்கள். அரசுக் காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பீர்கள். கூடுதல் பதவியோடு பணிச் சுமையும் இருக்கும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரை எப்போதுமே காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வந்து விலகும். எனவே, மூன்றாம் நபரின் தலையீட்டை தவிர்க்கப் பாருங்கள். வாழ்க்கையின் மீது திடீரென்று வெறுப்புணர்வு வந்து போகும். அதனால், அவ்வப்போது வெளியூர்களுக்கு குடும்பத்தோடு சென்று வாருங்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு குரு விலகி 2ம் வீட்டில் தொடர்வதால் பணவரவிற்கு பஞ்சமிருக்காது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பல வருடங்களாக குழந்தை இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் குடும்பத்தை விட்டு ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். இந்த நேரத்தில் கொஞ்சம் வசதி வாய்ப்புகள் அதிகரிப்பதால் புது வீடு வாங்கலாமா என்று யோசிப்பீர்கள். உங்களில் பலர் வாங்கி விடுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு சமாளிப்பீர்கள். இதனால் பொறுமையோடு இருக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் உங்களின் சொல்பேச்சை கேட்க மாட்டார்கள். கொஞ்சம் மெதுவாகப் பேசி அவர்களின் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4ம் வீட்டிலும், கேது 10லும் அமர்வதால் எடுத்த வேலைகள் எதுவும் சட்டென்று முடியாது. அலுவலக த்தில் பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும். சிலருக்கு வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்துபோகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

இந்தாண்டு முழுக்க சனி 5ல் நிற்பதால் மனதில் இடதா வலதா என்கிற குழப்பம் நிலவியபடி இருக்கும். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று உங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் கொஞ்சம் தள்ளியிருங்கள். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து சரியாகும்.

18.12.2014 முதல் 6ம் வீட்டில் அமர்வதால் உங்களுக்கு ஆதரவு கூடும். இதுவரை உங்களை எதிர்த்தே பேசியவர்கள் அமைதியாக இருப்பார்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களாலும் ஆதாயமுண்டு.

வியாபாரிகளே! தொட்டது துலங்காமல் நஷ்டப்பட்டீர்களே! பாக்கியை வசூலிப்பதே பெரிய போராட்டமாக இருந்ததே! இந்த நிலைமையெல்லாம் மாறும். பற்று வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருக்க வேண்டாம். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுக மானவரை பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள். அவரிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசிக் கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 21ந் தேதி முதல் கேது 10ல் அமர்வதால் வேலை விஷயமாக அலைச்சல்கள் இருக்கும். மேலதிகாரியின் குறைகளை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் அதையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்காதீர்கள். அதேசமயம் சக ஊழியர்களிடமும் கவனமாகப் பழகுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்குத் தகுந்தவாறு செயல்படுவது நல்லது. வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாவார்கள்.

மாணவர்களே! வகுப்பறை படிப்பைத் தாண்டி மற்ற திறமைகளையும் வெளிப்படுத்துங்கள். அதற்கான முயற்சிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். பாடத்தில் சந்தேகம் வந்தால் உடனே தயங்காமல் கேளுங்கள். சோம்பலை உதறி அதிகாலையில் எழுந்து படியுங்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களுக்கு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். மக்களின் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகாக்கள் சிலர் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள். கலைத்துறையினரே! படைப்புகளை கொடுப்பதில் சின்னச் சின்ன தடுமாற்றங்கள் வந்து நீங்கும். ஆனாலும், உங்களின் புகழ் கூடித்தான் இருக்கும். சம்பளப் பாக்கியும் கைக்கு வந்து சேரும். இந்த 2014ம் ஆண்டின் முற்பகுதி கொஞ்சம் உங்களின் பொறுமையை சோதித்தாலும் பிற்பகுதியில் சாதிப்பீர்கள்.

பரிகாரம்: நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், குறுமாணக்குடி திருக்கண்ணார் தலத்தில் அருளும் கண்ணாயிரமுடையார் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே! உங்களின் யோகாதி பதியான செவ்வாய் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சந்திரன், சூரியன் அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் சின்னச் சின்ன வாய்ப்புகள்தானே பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள்.

சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். என்றாலும் ராசிக்கு 6ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் நெருங்கிய சுற்றத்தினர் மற்றும் பால்ய நண்பர்களுடன் மெல்லிய விரோதப் போக்கு வரக்கூடும்.

தொண்டை வலி, சைனஸ் தொந்தரவு வந்து நீங்கும். ஜூன் 12ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருக்கும். இதனால் ஒன்றுக்கு இரண்டாக செலவுகளும் கூடும். எனவே, கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்யம் பாதிக்கும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். ஏதோ தனக்கு பெரிய நோய் இருப்பதைப்போல மன பிரமை வந்து நீங்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செ ல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில், கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள். இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும், 4ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்காக நிறைய வேலைகள் வந்து கொண்டேயிருக்கும். பணிச்சுமையால் திணறுவீர்கள். உங்களில் சிலருக்கு உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும்போது மெதுவாகச் செல்லுங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஜூன் 21ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது தொடர்வதால் பரம்பரைச் சொத்து விஷயங்கள் சம்பந்தமாக சில பிரச்னைகள் தலைதூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்துபோகும்.

ஆனால், ராகு 3ம் வீட்டில் அமர்வதால் பயமும் படபடப்பும் வந்துநீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். இந்த ஆண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் தாயாரோடும், தாய்வழி உறவினர்களோடும் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டில் களவுபோக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினருடன் வெளியூர் பயணிப்பதாக இருந்தால் முன்கூட்டியே பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுச் செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்களை பராமரிப்பு செய்ய வேண்டியது வரும். அது சம்பந்தமான பராமரிப்புச் செலவு களும் அதிகரிக்கும். பழைய வழக்கு விஷயங்களால் நிம்மதியை இழப்பீர்கள்.

வியாபாரிகளே! இந்தாண்டு கொஞ்சம் வியாபாரத்தில் அவ்வப்போது லாபமும் நஷ்டமும் மாறிமாறித்தான் இருக்கும். ஜூன் மாதம் முதல் ஜென்ம குரு தொடங்குவதால் புதிய நட்புகளோடு திடீரென்று அறிமுகமாகும் நபரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் லாபம் பெருகும். பழைய வேலையாட்கள் விலகுவார்கள். அதனால் சிரமப்படுவீர்கள். புதிதாக வருபவர்களின் ஒத்துழைப்பும் குறையும். யாருக்கும் வேலை தொடங்கும் முன்பேயே பணம் தர வேண்டாம். பங்குதாரர்களுடன் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் வந்து நீங்கும்.

உத்யோகஸ்தர்களே! அலுவலகத்தில் உங்களின் முன்னேற்றம் சம்பந்தமான விஷயங்கள் யாவும் இழுபறியாகத்தான் இருக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும் அதிகாரிகள் குறை கூறத்தான் செய்வார்கள். சக ஊழியர்களால் உங்களின் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும். அதற்காக அவரசப்பட்டு யாரையும் பேசாதீர்கள். உங்கள் மீது சிலர் அவதூறு வழக்குகளை தொடர்வார்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோருக்குத் தெரியாமல் அநாவசியமாக வேறெந்த விஷயங்களிலும் ஈடுபட வேண்டாம். போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகள் தாமதமாகும்.

மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தொடக்கத்திலிருந்தே அன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விளையாடும் போதும் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கருத்துக்கு எதிரான கருத்தை சக தொண்டர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். தலைமையின் ஆணையை நீங்கள் மீறுவது போன்ற தோற்றத்தை உருவாக்காதீர்கள். மீறி தனி ஆவர்த் தனம் வேண்டாம். கட்சி மேலிடத்து விஷயங்களை வெளியிட வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள்.

கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இந்த 2014ம் ஆண்டு சின்னச் சின்ன சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளை படைக்கும் சக்தியை தருவதாக அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலி – பாளையங்கோட்டை – நாகர்கோவில் சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள பொன்னாக்குடி தலத்திலுள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து வாருங்கள். இதுவொரு பைரவத் தலமும் ஆகும். ஏதேனும் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: