உணர்வுப்பூர்வமாக யோசித்து அறிவுப்பூர்வமாக செயல்படுபவர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் பிறப்பதால் சட்டென்று வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். அதை செயல்படுத்தவும் துவங்கிவிடுவீர்கள். சாதூர்யமாகப் பேசி பல பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் பெருமை பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »