• திசெம்பர் 2013
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,645 hits
  • சகோதர இணையங்கள்

அல்சர் எனப்படும் குடற் புண்ணால் அவதிப்படுகின்றீர்களா???

 

‘அல்சர்’ எனப்படும் குடல் புண்ணால் பலரும் அவதிப்பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவாவதாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுவதுதான் ‘அல்சர்’ எனப்படுகிறது.

இதனால், சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும்.

நெஞ்செரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும். வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என அல்சர் வாட்டியெடுத்துவிடும்.

சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாகச் சாப்பிடாமல் விடுவதும், துரித உணவு, எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், காபி, டீ அதிகம் அருந்துவது போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. அதேபோல் அதிக டென்ஷன், மனஅழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்படக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனஅழுத்தத்தால்… ஒரு சிலருக்கு பாரம்பரிய ரீதியிலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். டென்ஷன் ஏற்படும்போது குடலில் அமிலம் அதிகமாகச் சுரக்கிறது. இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது.

மருந்தின் வீரியத்தால் பாதிப்பு பலர், சாதாரணமாக ஏற்படும் தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள்.

அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. ஏனெனில், ஆன்டிபயாடிக் உட்கொள்ளும்போது மருத்துவர்கள் தரும் பி.காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம்.

தவிர்க்கும் பட்சத்தில் மருந்தின் வீரியத்தினால் வயிற்றில் புண்கள் ஏற்படலாம். உணவைத் தவிர்க்கக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் உணவு வேளைகளைத் தவிர்க்க கூடாது. நம் வயிற்றுக்குள் குடலைப் பாதுகாக்கும் மெல்லிய திரை போன்ற அமைப்பு கூடாது.

மேலும், அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையிலான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிடாமல், கொஞ்சமாக, அடிக்கடி சாப்பிடலாம்.

எதையும் நன்கு கடித்து, மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும். குழைய வேகவைத்த அரிசிச் சாதம், அவல் பொரியில் கஞ்சி போன்றவை செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நன்றாக வேகவைத்து, மசித்துச் சாப்பிட வேண்டும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

எண்ணெய் பலகாரங்கள் கூடாது வயிற்றுப்புண் ஏற்பட்டவர்கள், ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சைக் காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, மசாலா, காரமான குழம்பு இவற்றை அறவே தவிர்க்கவேண்டும்.

உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்குச் செல்லக்கூடாது. ஏனெனில் அது நெஞ்செரிச்சல் ஏற்பட வழிவகுக்கும். எனவே, சாப்பிட்டபின் மூன்று மணி நேரம் கழித்தே உறங்கவேண்டும். நேரம் கெட்ட நேரத்தில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது அவதியை அளிக்கும். பொதுவாக, வயிற்றுப்புண் உள்ளவர்கள், தங்கள் குடலை கண்ணும் கருத்துமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: