பிறப்பு இறப்பு
09.05.1935 04.12.2011
நடராஜா ஞானலிங்கம்
ஈராண்டு சென்றதையா அப்பரே உம்மைப் பிரிந்து
காற்றாய் கலந்து கைலாயம் சென்றதேனோ
சிட்டாய் பறந்து சிவலோகம் சென்றதேனோ
தாயை இழந்து நாங்கள் தவித்து நின்ற வேளை
தந்தையும்,தாயுமாய் இருந்து தரணியில்
தலைநிமிர்ந்து நாம் வாழ்ந்திட தனித்துவமாய்
தனித்து நின்று பாடுபட்டீர்கள் இன்று எம்மை
தவிக்கவிட்டு சென்றதேனோ
அப்பா !அப்பா !! என நாம் அழும்குரல்கள் கேட்கலையோ
மாமா! மாமா!! என மருமக்கள் கதறியழும் ஓசை உங்களுக்கு
காதோரம் கேட்கலையோ அப்பப்பா ! அப்பப்பா !!என அலறும்
குரல் உங்களுக்கு கேட்கலையோ !!!
சந்தனப் பொட்டும் கையில் சலங்கையாய் மோதிரங்களும்
வெள்ளை மனமும் வெண்ணிற உடையும் வெண்முத்து பற்கள்
பளிச்சிடும் வெள்ளையாய் சிரிக்கும் உங்கள் முகத்தையும்
எப்பிறப்பில் காண்போம் இனி !!!
ஈராண்டு மட்டுமல்ல நூறாண்டு சென்றாலும் உங்கள்
பூமுகம் மறவாது நாம் இருப்போம் உங்கள் நினைவாக
என்றென்றும்
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
மக்கள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்